சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிவரும் இவருக்கு இப்பொழுதும் வாய்ப்புகள் குவிந்து கொண்டுதான் இருக்கிறது கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது.
அதனைத் தொடர்ந்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவ கார்த்திகேயன் மற்றும் பல இளம் நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நெல்சன் ஜெயிலர் படத்தின் கதையை வேற மாதிரி செதுக்க உள்ளதால் நிச்சயம் இந்த படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனைத் தொடர்ந்து ரஜினி பல்வேறு சிறந்த இயக்குனர்களிடமும் கதை கேட்டு வந்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பாடகரும் கவிஞருமான வைரமுத்து அவர்கள் ரஜினி குறித்து பேசி உள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் என பல எழுதி உள்ளார் அதிலும் குறிப்பாக கள்ளிக்காட்டு இதிகாசம் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிப்புகள் விற்கப்பட்டுள்ளது மதுரையில் வைகை அணை கட்டும் பொழுது அங்கு இருந்து குடிபெயர்ந்த மக்கள் அனுபவித்த சிரமங்களை பற்றி அந்த நாவல் பேசியது.
இந்த நாவல் படமாக்கப்பட்டால் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் 70 வயது மதிப்பு தக்க திராவிட நிறம் உள்ள இளைத்த வேகம் உடைய உயரமான நபர் ஒருவரை தான் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதை திரைப்படமாக உருவாகினால் ரஜினிகாந்த்க்கு மட்டுமே சூப்பராக பொருந்தும் அவர் நடித்தால் நல்லது என கூறியுள்ளார் ஆனால் அவர் எதிர்பார்க்கும் சம்பளம் கிடையாது இருந்தும் அவர் எதிர்பார்க்காத அளவிற்கு விருதுகள் கிடைக்கும் என வைரமுத்து கூறியுள்ளார்.