அண்மை காலமாக திரையரங்கில் பல டாப் நடிகர்கள் படங்கள் வெளியாகி வருக்கின்றன அந்த வகையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து விஜயின் பீஸ்ட் திரைப்படமும் திரை அரங்கில் கோலாகலமாக வெளியானது.
ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை ஏனென்றால் லாஜிக் மீறல் காமெடி அந்த அளவில் ஒர்க்அவுட் ஆகவில்லை. கதை களமும் பழைய கதைகளைப் போலவே இருந்ததால் படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதனால் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இருப்பினும் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் பலர் பார்த்து வருகின்றனர் அந்த வகையில் அண்மையில் ரஜினி கூட இந்த படத்தை பார்த்தார் அதனை தொடர்ந்து ரஜினியை பார்த்த திரைப்படம் தான் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் 2.
இந்த படம் ரஜினியையும் தாண்டி பலரையும் கவர்ந்து இழுத்தது ஏனென்றால் அந்த அளவிற்கு படத்தில் மாஸ் சீன்கள் பஞ்ச் டயலாக் ஆக்சன் சென்டிமெண்ட் போன்ற அனைத்தும் இடம்பெற்ற இருந்ததால் அனைவரையும் கவர்ந்திழுத்தது அதுபோல ரஜினியையும் இந்த படம் கவர்ந்து இழுத்தது படத்தைப் பார்த்துவிட்டு KGF 2 பட தயாரிப்பாளருக்கு போன் செய்து பேசியுள்ளார் ரஜினி அதில் அவர் கூறியது.
இந்தப் படத்தில் பணியாற்றிய பட குழுவினர் மற்றும் நடிகர் யாஷ் ஆகியோர்களை பாராட்டி தள்ளினார் மேலும் தயாரிப்பாளரையும் புகழ்ந்து பேசிய பாராட்டினாராம் ரஜினி இப்படி ஒரு சிறப்பான படம் வெளிவந்தது மிக அருமை எனவும் கூறினாராம் இச்செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.