சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். அண்மை காலமாக இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் 200 கோடி வசூல் அள்ளி அசத்தியது இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர் இந்த படம் ரஜினிக்கு 169 திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வந்தாலும் இந்த படத்தில் சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது ஜெயிலர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் பிற இடங்களில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களிலும் நடிகர் ரஜினி நடிக்க ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
கே எஸ் ரவிக்குமார் ரஜினி வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் இவர் ஒரு கட்டத்தில் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் ரஜினியை வைத்து எடுக்க இருந்த திரைப்படம் ராணா இந்த படத்தின் பூஜை எல்லாம் போடப்பட்டு சில காரணங்களால் அப்பொழுது படம் நின்றது.
இந்த படம் மிகப் பிரம்மாண்டம் அதாவது பாகுபலி ரேஞ்சுக்கு இந்த படத்தை எடுக்க இருந்தனராம் ராணா திரைப்படத்தில் மொத்தம் மூன்று கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க இருந்தார் அதில் ராணா கதாபாத்திரம் கொடூரமான வில்லன் கதாபாத்திரமாம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் கே ஏ சரவிக்குமாறு வெளிப்படையாக கூறியுள்ளார்..