தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து இப்பொழுதும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த காரணத்தினால் நம்பர் என்ற அந்தஸ்தை தற்போதும் தக்க வைத்துக் கொண்டு ஓடுகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம்.
சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது மேலும் இந்த திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் உடன் கை கோர்த்தது தனது 169 திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பொழுது நெல்சன், விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் இதை முடிந்த உடனேயே அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்குவார் அதற்கான வேலைகளையும் செய்ய ரெடியாக தான் இருக்கிறார் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ரஜினி ஒரு திரைப்படத்திற்கு இப்போ சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ரஜினிகாந்த் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஆரம்பத்தில் இருந்த பொழுது ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் ஒரு படம் நடித்து கொடுத்துள்ளார். எந்த படம் தெரியுமா வேறு எதுவுமல்ல..
1997 ஆம் ஆண்டு bhagya bebata பெங்காலி படத்தில் ரஜினியை ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துள்ள அந்தப் பட இயக்குனர் ரகுராம் தெரிவித்துள்ளார். அன்னைக்கு காசு கொடுக்க நாங்கள் தயாராக இருந்தோம் ஆனால் ரஜினியோ அதை விரும்பவில்லை இந்த முடிவை அவர் எடுத்து இருந்ததாக தெரிவித்தார்.