சரத்குமாருக்கு போலீஸ் கதையை சொன்ன “ரஜினி”.! போர்தொழில் படத்தை விட திரில்லர் அதிகம்.?

RAJINI
RAJINI

Rajini : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு ஓடுகிறார் அதுபோல சுப்ரீம் சூப்பர் என்ற பட்டத்தை பல வருடங்களாக தக்கவைத்து ஓடி கொண்டு இருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் படங்களை தயாரித்தும் விநியோகமும் செய்து வந்தார்.

இவருடைய உடல் அமைப்பை பார்த்து வில்லனாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் வந்தது அதில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திய நாட்டாமை, சூரிய வம்சம், நட்புக்காக என வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது வயது முதிர்வின் காரணமாக..

டாப் ஹீரோக்களுக்கு அப்பா, சித்தப்பா, வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கூட பொன்னியின் செல்வன் , பீஸ்ட், போர் தொழில் படத்தில் நடித்தார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் சரத்குமாருக்கு ரஜினி ஒரு கதை சொல்லி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. காஞ்சனா படத்தை பார்த்த ரஜினி ஏன் இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்தது என யோசித்தாராம்.

அதன் பிறகு தான் தெரிந்ததாம் சரத்குமாரின் என்ட்ரி அந்த படத்திற்கு பெரிய ஹைப்பை கொடுத்தது என்று.. இதை சரத்குமார் இடம் ரஜினியை சொன்னாராம் அது மட்டும் இல்லாமல் சரத்குமாரிடம் ஒரு கதையும் சொல்லி உள்ளார் ரஜினி சூப்பர் ஸ்டார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் நடிக்கும் என்று சொல்லி அந்த படத்தின் கதையை சரத்குமாரிடம் சொல்லி இருக்கிறார்.

அந்த படத்தின் கதைப்படி ரஜினியும் சரத்குமாரும் போலீஸ் அதிகாரியாக வருவார்களாம் மேலும் கதை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடமும் ரஜினி சொல்லி எடுக்கலாம் என நினைத்தாராம்.. காலா போக்கில் இருவருமே வேற வேற பாதையில் ஓடியதால் அந்த படம் கைவிடப்பட்டது.