Padaiyappa : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது இதனை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினி தொடங்கி இயக்குனர்..
இசையமைப்பாளர் அனிருத் போன்றவர்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான சொகுசு கார் மற்றும் செக்கை பரிசாக கொடுத்திருந்தார் அதோட நிறுத்திக் கொள்ளாமல் அடுத்த சில தினங்களிலேயே படத்தில் பணியாற்றிய சின்ன நடிகர்கள் தொடங்கிய படத்தில் அனைத்து பேருக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயத்தை இப்பொழுது நாம் பெரிதாக பேசுகிறோம் ஆனால் 1999 ஆம் ஆண்டு ரஜினியும் மிகப்பெரிய ஒரு சம்பவத்தை பண்ணி உள்ளார் 1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் படையப்பா ரஜினி உடன் இணைந்து சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், ரமேஷ் கண்ணா, மன்சூர் அலிகான்..
மணிவண்ணன், சிவாஜி கணேசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியது. படையப்பா படத்தை ரஜினியும் தயாரித்து இருந்தார். படையப்பா படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே பெரிய வெற்றியை பதிவு செய்தது இதனை அடுத்து ரஜினி தேனப்பன் என்கின்ற production மேனேஜரை அழைத்து பணம் மற்றும் ஒரு லிஸ்ட்டை கொடுத்தார்.
அதில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரது பெயரும் இருந்ததாம். அவர்கள் வாங்கிய சம்பளத்தை விட டபுள் சம்பளம் கொடுக்கும் படி இருந்ததாம்.. படையப்பா படம் மாபெரும் வெற்றி பெற்றதால் பெரிய லாபத்தை ரஜினி பார்த்தார் ஆனால் அவர் மட்டும் சந்தோஷமாக இல்லாமல் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அதிக சம்பளத்தை கொடுத்து அந்த சமயத்தில் அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.