நடிகையின் முன்பு சத்யராஜை கலாய்த்த ரஜினி.? 37 வருடங்களாக் தொடரும் பகை

rajini and sathyaraj
rajini and sathyaraj

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுதும் கூட வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறார் ரஜினியின் ஸ்டைல் அவரது நடிப்பு மற்றும் எளிமை என அனைத்தும்..

ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கும் ரொம்ப பிடித்திருந்ததால் இப்பொழுதும் அவரது மார்க்கெட்டு கீழே இறங்காமல் இருக்கிறது. ரசிகர்கள் மக்களையும் தாண்டி பல நடிகர்களுக்கு கூட ரஜினி பிடித்தவராக இருக்கிறார் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும் மறைமுகமாக ரஜினியை விமர்சிப்பது அவரது படத்தில் நடிக்காமலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ரஜினியும் சத்யராஜும் ஒன்றாக படங்களில் இணைவதில்லை மேலும் சத்யராஜ் ரஜினியை அவ்வபொழுது மறைமுகமாக விமர்சித்தும் வருகிறார் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 90 கால கட்டங்களில் சத்யராஜ்ஜை விட ரஜினிகாந்தின் மார்கெட் அதிகரித்த சமயம் அப்பொழுது தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் ரஜினி சத்யராஜ் நடித்தார்கள்.

அந்தப் படத்தில் நடிகை மாதவி ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படி சூட்டிங் நடந்த பொழுது  ரஜினிகாந்த் நடிகை மாதவியிடம் சத்யராஜ் பற்றி கிண்டலாக பேசியது மிகப்பெரிய சங்கடத்தை கொடுத்தது. புதிதாக லண்டனில் இருந்து வந்த ப்ரொபசர் இருக்கிறார் நன்றாக படிப்பை கற்றுக் கொடுப்பார் என சத்யராஜை கேலி செய்யும் வகையில் மாதவிடம் கூறுகிறார் இது உண்மை என நினைத்து மாதவியும் சத்யராஜிடம் ஏதோ  கூறி வாய் கொடுத்து மாட்டிக் கொண்டார்.

அன்றிலிருந்து சத்யராஜ், ரஜினி மீதான ஈகோவை வளர்க்க காரணமாக இருந்தது. சில வருடங்கள் கழித்து 1986 ஆம் ஆண்டு ரஜினி சத்யராஜ் நடிப்பில் உருவான மிஸ்டர் பாரத் படத்தில் இருவருக்கும் முக்கிய காட்சிகள் இருந்தாலும் சத்யராஜின் பாதி காட்சிகள் வெட்டி வீசி உள்ளனர் இது ரஜினி தான் செய்துள்ளார் என அப்பொழுதே சத்யராஜ் நினைத்து ரொம்ப கோவப்பட்டாராம். அதை தொடர்ந்து அவ்வப்போது சத்யராஜ் ரஜினியை பற்றி படுமோசமாக விமர்சித்தும் நடந்து கொண்டுதான் இருந்தது.