வயதானாலும் கூட தொடர்ந்து ஹீரோவாக நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். கொஞ்சம் கூட ஸ்டைல் மாறாமல் அவருடைய இளமைக் காலத்தில் இருந்தது போலவே தற்பொழுதும் இருந்து வருகிறார் மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக எப்பொழுதும் வெற்றினை பெற்று வருகிறது. ஏனென்றால் அதற்கு முக்கிய காரணம் இவருடைய ரசிகர்கள் தான்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது தலைவர் 170 படத்திற்கு அதைவிட அதிகமாக சம்பளத்தை லைகா நிறுவனம் அவருக்கு தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் சன் பிரக்சஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்க இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜெயிலர் படத்தில் தன்னுடைய சம்பளத்தை குறைத்து 80 கோடி ரூபாய் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் தான் படத்தின் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக தலைவர் 170 திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக ரஜினிகாந்த் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கிட்டத்தட்ட தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்காக லைகா நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ரூபாய் 120 கோடி சம்பளம் தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பே லைகா நிறுவனம் அஜித்தின் ஏகே 62 படத்திற்கு அஜித்திற்கு 15 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் விஜய் வாரிசு திரைப்படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் தந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இதனை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் வழங்க இருக்கிறது இவ்வாறு தொடர்ந்து லைகா நிறுவனம் முன்னணி நடிகர்களை வளைத்துப் போட்டு வருகிறது.