இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி இருக்கிறேன் உதவுங்கள்.. கேட்டதை விட பத்து மடங்கு கொடுத்த ரஜினி – எமோஷனலாக பேசிய நடிகர்

Rajini
Rajini

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73 வயதிலேயும் தொடர்ந்து படம் பண்ணி வருகிறார் ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து கைவசம் லால் சலாம், தலைவர் 170, 171 ஆகிய படங்கள் இருக்கின்றன. முதலாவதாக லால் சலாம் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது அடுத்து தலைவர் 171 படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார்.

இந்த படத்திற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ரஜினியின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ ஒன்று வெளியாகிய வைரலானது இதை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் வேட்டையன் திரைப்படம் அதிரடி ஆக்சன் எமோஷனல் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து செந்தில் மற்றும் நடிகர் அனுமோகன் பேசிய உள்ளனர். முதலில் செந்தில் சொன்னது என்னவென்றால்..

செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை..

ரஜினி யாருக்கும் தெரியாமல் உதவி செய்யக் கூடியவர் அப்படியே பலருக்கு செய்து உள்ளார் எனக்கு தெரிந்து நடிகர் அனுமோகன் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த பொழுது உதவி செய்திருக்கிறார் என கூறினார் அவரை தொடர்ந்து அனுமோகன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் சொன்னது என்னுடைய மகள் கல்யாணத்திற்கு கொஞ்சம் காசு தேவைப்பட்டது.

நான் ரஜினிகாந்துடன் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன் அவரிடம் கடனுக்கு கேட்டாலும் அது தப்பாகிவிடும் வேறு வழி இல்லாமல் அவர் வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வைத்தேன் அவர் இல்லை ஆனால் அவருடைய மேனேஜர் இருந்தார் அந்த பத்திரிக்கைக்குள் கொஞ்சம் பணம் வேண்டும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் என கூறினேன்.

சின்ன கலைவாணர் விவேக்கின் மகளை பார்த்து உள்ளீர்களா.? அம்புட்டு அழகு.. வைரலாகும் புகைப்படம்

Anumohan
Anumohan

விஷயத்தை தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் கல்யாணத்திற்கு முன்பாக நான் கேட்டதை விட பத்து மடங்கு அதிகமான பணத்தை கொடுத்தார் என கூறினார். கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது ரஜினியை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன் என கூறி இருக்கிறார் இதுபோல மறைமுகமாக ரஜினி தொடர்ந்து உதவிகளை செய்துதான் வருகிறார்.