தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருவது மட்டுமில்லாமல் தற்பொழுது வயது முதிர்ந்தாலும் சரி இவரை வைத்து திரைப்படங்கள் இயக்குவதற்கு இயக்குனர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது ஆனால் இவை எந்த அளவிற்கு உண்மை என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை நெல்சன் அவர்கள் இயக்குவது மட்டும் இல்லாமல் இதில் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தாலும் இது குறித்த அதிகாரவூர்வமான அறிவிப்பு இன்னும் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகவில்லை.
பொதுவாக இயக்குனர் நெல்சன் திலிப் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவர்களும் சிறந்த நண்பர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பேசி வருவது மட்டுமில்லாமல் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் கெஸ்ட் ரோலில் நடிப்பதை ரஜினிகாந்த் அவர்கள் தேவையில்லை என்று கூறியது மட்டும் இல்லாமல் இதில் சுத்தமாக விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளாராம். ஏற்கனவே ரஜினி திரைப்படத்தில் தனுசை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதற்கு கேட்ட பொழுது ரஜினி வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அந்த வகையில் மருமகனுக்கே இடமில்லாத இடத்தில் சிவகார்த்திகேயனை எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அனுமதிப்பார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.