உச்சகட்ட சந்தோஷத்தில் நடிகையின் வீட்டிற்கு நடுராத்திரியில் சென்ற ரஜினி.. என்ன நடந்தது தெரியுமா.?

Rajini
Rajini

Rajini : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருக்கும் ரஜினி இதுவரை 169 திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் நடிப்பில் கடைசி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது உச்சத்தில் இருக்கும் ரஜினியை ஆரம்பத்தில் பல தடைகளையும், அவமானங்களையும் சந்தித்து படிப்படியாகத்தான் முன்னேறினார்.

முதலில் நடத்துனராக வேலை பார்த்து இந்த சமயத்தில் மேடை நாடகங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார் அப்படி நடிக்கும் போது இவரது நடிப்பை பலரும் தூக்கி வைத்து பேசினார். அந்த நம்பிக்கையால் சினிமாவில் நடிக்க சென்னை வந்தார்  கே. பாலச்சந்தர் கண்ணில் பட்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ஆரம்பத்தில் இவருடைய நடிப்பு மற்றும் அழகு சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் இவரை பலரும் விமர்சித்தனர்.

அதன் பிறகு தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி அடுத்தடுத்த வெற்றிகளை கண்டார்.  தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நபர்களில் ஒருவராக ரஜினி இருந்து வருகிறார். இப்படிப்பட்ட ரஜினி ஒரு தடவை நடிகையின் வீட்டை இரவு நேரத்தில் தட்டி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

ரஜினியும், ஹீமா சௌத்ரியும் சினிமா கல்லூரியில் ஒன்றாக படித்தார்களாம் அப்பொழுது நல்ல நண்பர்களாக பழகினர். முதலில் நடிகை ஹீமா சௌத்ரிக்கு வாய்ப்பு கிடைத்தது ரஜினிக்கு லேட் ஆகத்தான் கிடைத்ததாம் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் ரஜினி தனிமையில் தான் இருப்பார்.

ஒரு வழியாக கே பாலச்சந்தர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இதை உடனடியாக என்னிடமும், என் தாயிடமும் சொல்ல வேண்டும் என்பதற்காக நள்ளிரவில் என் வீட்டுக்கு வந்தார். நேராக என் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கினார். இப்பொழுது சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினி அப்பொழுது எப்படி எளிமையாக இருந்தாரோ அதேபோல் தான் இருக்கிறார் என கூறியுள்ளார் ஹீமா சௌத்ரி.