பிரபல இயக்குனரை செட்டில் பார்த்ததும் பதறிபோய் ரஜினி செய்த வேலை..! பழைய நினைவுகளை பகிர்ந்த பிரபல நடிகர்.!

rajini-
rajini-

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அண்மைக்காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருட்செளவில் படத்தை எடுத்து வருகிறது இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் தற்பொழுது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, கன்னட டாப் நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இது இப்படி இருக்க ரஜினி பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் ரஜினி குறித்து பேசி உள்ளார். உங்களை ஒரு முறை பார்த்திருக்கிறேன் என ரஜினி கூறியுள்ளாராம் ஒரு பெரிய நடிகர் நம்மை ஞாபகம் வைத்திருக்கிறது மிகப்பெரிய ஒரு ஆச்சரியம் என கூறினார்.

அப்பொழுது ரஜினி சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க இயக்குனர் ஷங்கர் செட்டுக்குள் நுழைந்து இருக்கிறார் ஷங்கரை பார்த்ததும் சிகரெட்டை கீழே போட்டு மிதித்திருக்கிறார் இதனை பார்த்த மீசை ராஜேந்திரன் பல ஹீரோக்கள் எல்லாம் இயக்குனரை பார்த்தாலும் கூட கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடிப்பார்கள் ஆனால் இவ்வளவு பெரிய ஸ்டார் இந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார் என வியந்து பார்த்தாராம்.

மேலும் மீசை ராஜேந்திரனும் சில நடிகர்களும் சேர் இல்லாமல் நின்று கொண்டிருக்கும் போது ரஜினிகாந்த் அங்கு உள்ளவர்களை பார்த்து இவர்களும் நடிகர்கள் தானே இவர்களுக்கும் ஷேர் கொண்டு வாருங்கள் எனக் கூறியிருக்கிறார் மேலும் அவர்கள் சேரில் அமர்ந்த பிறகு தான் ரஜினி அமர்ந்தாராம் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் எந்த பாகுபாடும் காட்டாமல் சக நடிகருக்கு மதிப்பு கொடுக்கும் குணம் தான் அவரை சூப்பர் ஸ்டாராக மாற்றியதாக கூறினார்.