சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை உண்டு அந்த வகையில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க பலர் ஆசைப்பட்டுள்ளனர் அதிலும் குறிப்பாக மணிரத்தினம் இந்த படத்தை எடுத்து தீர வேண்டும் என பல தடவை முயற்சி செய்தார் ஆனால் அது நடக்காமல் போனது ஒரு வழியாக தற்போது தான் அந்த கனவை நிறைவேற்றி உள்ளார்.
500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஜெயராஜ், கிஷோர், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் பொன்னியின் செல்வன் நாவல் பலபேர் படித்துள்ளனர் அதை திரையரங்குகளில் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறார்.
காரணம் அவருக்கு பிடித்த நாவல்களில் ரொம்ப பிடித்தது பொன்னியின் செல்வன் நாவல் தான் அதை அவர் பல மேடைப்பேச்சுகளில் கூட சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது பொன்னியின் செல்வன் நாவலை அதிக முறை படித்து உள்ளார்.
ரஜினி இந்த படத்தில் சின்ன காட்சியில் வந்து போக சொல்லி இருந்தால் கூட ரஜினி நடித்திருப்பார் என சொல்லப்படுகிறது அந்த அளவிற்கு பொன்னியின் செல்வன் கதை பிடிக்கும் என கூறப்படுகிறது இதை மணிரத்தினமும் அறிந்திருப்பார் அப்படி இருக்கையில் ஏன் ரஜினியை இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை என பலரும் கேள்வி கேட்கின்றனர்.