கடந்த சில வருடங்களாக பிற மொழி படங்கள் தமிழில் அதிகம் ரீமேக் செய்யப்படுகிறது அந்த வகையில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் அங்கு சக்க போடு போட்டது இந்த படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ்..
என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் தமிழிலும் இந்த படம் நன்றாகவே ஓடியது. பாபநாசம் திரைப்படத்தை சுரேஷ் பாலாஜி, ராஜ்குமார் சேதுபதி இணைந்து தயாரித்திருந்தனர் இந்த படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் சமிபத்தில் பேசியுள்ளது.
இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது சொன்னது.. மலையாளத்தில் த்ரிஷ்யம் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாணு தொடர்பு கொண்டு இந்தப் படத்தை நாம் ரீமேக் செய்யலாம் என கூறி இருக்கிறார். அதற்கு எஸ். தாணு அந்த படத்தின் ரீமேக் உரிமையை ஏற்கனேவே தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி பெற்றுவிட்டார்.
அவர் இந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என விரும்புகிறார் என கூறினாராம் அதன் பிறகு பா. ரஞ்சித் கலைபுலி தாணுவிடம் கபாலி திரைப்படத்தின் கதையை கொண்டு வந்தாராம் பா. ரஞ்சித் சொன்ன ஒன் லைன் மிகவும் பிடித்து போக உடனே ரஜினிகாந்திடம் பா ரஞ்சித் கூறிய ஒன் லைன் நன்றாக இருக்கிறது என கூற..
சில நாட்கள் கழித்து இயக்குனர் பா. ரஞ்சித் முழு கதையையும் ரஜினிகாந்த் மற்றும் கலைப்புலி எஸ் தாணு அவர்களிடம் கூறினாராம். ரொம்ப பிடித்துப் போகவே பா ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படிதான் கபாலி திரைப்படம் உருவானதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.