சூப்பர்ஸ்டார் ரஜினி VS நவரச நாயகன் கார்த்திக் : 18 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயிச்சது யார் தெரியுமா.?

Rajini
Rajini

சினிமா உலகில் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் எம்ஜிஆர் – சிவாஜி ரஜினி – கமல், அஜித் –  விஜய் பார்த்து வருகிறோம்.. அதுபோல ரஜினியும், நவரச நாயகன் கார்த்தியும் 18 முறையும் மோதியுள்ளனர் அதில் யார் யார் வெற்றி பெற்றார் என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

போக்கிரி – இளஞ்ஜோடிகள் : 1982 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த இரண்டு படங்களும் வெளியானது இதில் ரஜினியின் போக்கிரி திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியை பதிவு செய்தது. 1982 ஆம் ஆண்டு தமிழ் ரஜினியின் ரங்கா படமும் கார்த்திக்கின் நேரம் வந்தாச்சு படம் வெளியானது இதில் ரஜினி படம் ஹிட் அடித்தது.

ரவீனாவை வெளுத்து வாங்கிய கமல்.. மணிக்கு கிடைத்த அடையாளம்.. அதிரடியான பிக் பாஸ் ப்ரோமோ

1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14  ரஜினி நடித்த எங்கேயோ கேட்ட குரல் படமும், கார்த்திக்கின் கண்ணே ராதா படம் வெளியானது  இந்த தடவையும் ரஜினி தான் வெற்றி பெற்றார் 1983 ஆம் ஆண்டு  தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரஜினியின் தாய்வீடு, கார்த்திக்கின் பகவதிபுரமும் ரிலீஸ் ஆனது இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது.

1983 ஆம் ஆண்டு ரஜினியின் தங்க மகன் படமும், கார்த்திக்கின் அபூர்வ சகோதரர்கள் வெளியானது இதில் கார்த்தி படம் ஹிட் அடித்தது. 1986 ஆம் ஆண்டு கார்த்தியின் நட்பு படமும் ரஜினியின் விடுதலை படமும் வெளியானது இதில் நட்பு படம் சூப்பர் ஹிட் அடித்தது.

பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியல.. வலியையும் வேதனையும் பகிர்ந்த கஞ்சா கருப்பு

1988 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கார்த்தியின் அக்னி நட்சத்திரம், ரஜினியின் குரு சிஷ்யன் படமும் வெளியானது. இதில் குரு சிஷ்யன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அக்னி நட்சத்திரம் படம் வெள்ளி விழா கண்டது. 1988 ஆம் ஆண்டு கார்த்தியின் காளிச்சரண் படமும், ரஜினியின் கொடி பறக்குது படமும் வெளியானது இந்த இரண்டு படங்களுமே சுமாராக ஓடியது.

1989 ஆம் ஆண்டு ரஜினியின் சிவா கார்த்தியின் பாண்டி நாட்டு தங்கம் படம் வெளியானது இதில் கார்த்தி படம் ஹிட் அடித்தது. 1989 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கார்த்திக்கின் ன் திருப்புமுனை படமும் ரஜினியின் மாப்பிள்ளை படமும் வெளியானது இதுல ரெண்டு படமே ஹிட். 1990 இல் கார்த்திக்கின் இதய தாமரை, ரஜினியின் பணக்காரன் படமும் வெளியானது. பணக்காரன் படம் நாம் சொல்லத் தேவையில்லை அந்த அளவுக்கு ஓடி பெரிய ஹிட் அடித்தது.

1991 ஆம் ஆண்டு  பொங்கல் தினத்தை முன்னிட்டு ரஜினியின் தர்மதுரை ரிலீஸ் ஆனது இரண்டு வாரங்கள் கழித்து வணக்கம் வாத்தியார் இதில் ரஜினி படம் ஹிட் அடித்தது 1992 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ரஜினியின் மன்னன், கார்த்திக்கின் அமரன் படம் வெளியானது. இதில் கார்த்தி படம் ஓடி வெற்றி பெற்றிருந்தாலும் ரஜினியின் மன்னன் திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

1992 ஆம் ஆண்டு கார்த்தியின் இது நம்ம பூமி, ரஜினியின் அண்ணாமலை வெளியானது. அண்ணாமலை 150 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய ஹிட் அடித்தது. 1993இல் ரஜினியின் எஜமான் கார்த்தியின் சின்ன கண்ணம்மா வெளியானது இதில் ரஜினி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

1994 ரஜினியின் வீரா படமும் கார்த்தியின் சீமான் படமும் வெளியானது இதில் வீரா படம் பிளக்பஸ்டர் ஹிட் அடித்தது 1997 இல் ரஜினியின் அருணாச்சலம், கார்த்தியின் சிஷ்யா படமும் வெளியானது இதில் அருணாச்சலம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 1999 ஆம் ஆண்டு கார்த்தியின் நிலவே முகம் காட்டு ரஜினியின் படையப்பா படம் வெளியானது இதில் படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட்.