ரஜினிக்கு முன்பு முந்திக்கொள்ள வேண்டும் என கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை!! பரபரப்பு தகவல்….

kamal-biggboss
kamal-biggboss

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த பிறகு அரசியலிலும் வலம் வர வேண்டும் என ரசிகர்கள் முதல் மக்கள் வரை பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கட்சி குறித்து தெளிவான ஒரு முடிவை எடுக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினி பேசியுள்ளார், அப்பொழுது ரஜினிகாந்த் கூறியதாவது விரைவில் அரசியல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.

ஆனாலும் கண்டிப்பாக அரசியல் குறித்த முடிவை விரைவில் அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த நிலையில் நாளை உலக நாயகன் கமலஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கமலஹாசன் அரசியலில் கால் தடம் பதித்து விட்டார்,  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி யின் அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு கமலஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் என்ற தகவலை அந்த அறிக்கையில் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமலஹாசன் ஒரு சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோலிவுட் வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.