90 கால கட்டங்களில் அதிக ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு பெரும்பாலான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து சூப்பராக ஓடியவர்கள் ரஜினி, விஜயகாந்த அப்பொழுதைய காலகட்டத்தில் பெரும்பாலான இயக்குனர்கள் ரஜினி, விஜயகாந்த்துடன் இணைந்து படம் பண்ணினால் மிகப் பெரிய ஒரு வெற்றியை பெற்று விடலாம் என கணக்கு போட்டு..
அவர்களுடன் பணியாற்ற காத்து கடந்த காலங்கள் உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஹரி ஒரு சூப்பரான கதையை உருவாகி அதை ரஜினியிடம் முதலில் கூறி உள்ளார் ஆனால் ரஜினி அந்த கதையை தவற விட்டுள்ளார் பின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆன கேப்டன் விஜயகாந்திடம் கதையை கூறியுள்ளார்.
அவர் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் உள்ளது பின் ஒரு வழியாக அடுத்ததாக நடிகர் சரத்குமார்க்கு இந்த கதையை சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தில் நடித்தார் அந்த படம் தான் ஐயா இந்த படத்தில் சரத்குமார் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ் ராஜ் நெப்போலியன் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் அப்பொழுது திரையரங்கில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி அசத்தியது மேலும் அதிக அளவில் வசூல் செய்த திரைப்படமாக அப்பொழுது பார்க்கப்பட்டது.
இந்த திரைப்படம் இயக்குனர் ஹரிக்கும் சரி நடிகர் சரத்குமாருக்கும் சரி அவர்களது கேரியரில் பெஸ்ட் படமாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐயா படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு ரஜினியும், விஜயகாந்த்தும் இப்படி ஒரு சிறந்த படத்தை மிஸ் செய்து விட்டோமே என வருத்தப்பட்டனராம்.