veera movie collection : 1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, விவேக், ஒய் ஜி மகேந்திரன், வடிவுக்கரசி, ஜனகராஜ், சார்லி ,செந்தில், வினு சக்கரவர்த்தி, பிரபாகர், சரண்ராஜ், என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்த திரைப்படம் “வீரா”. இந்த திரைப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா தான் இயக்கியிருந்தார் படத்தை மீனா பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார்.
படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது இந்தத் திரைப்படத்தில் ரஜினி முதலில் ஒரு பெண்ணை காதலிப்பார் அவர் தான் மீனா, பின்பு நகரத்திற்கு போய் தன்னுடைய வீட்டுக் கடனை அடைப்பதற்காக பாட்டு பாடி அதில் வரும் பணத்தை எடுத்துக் கொண்டு கிராமத்திற்கு வந்து பணத்தை கொடுத்து கடனை அடைப்பார் ஆனால் அவரின் காதலி வெள்ளத்தில் அடித்து சென்று விட்டதாக கூறி விடுவார்கள்.
உடனே தன்னுடைய தாயாரை அழைத்துக் கொண்டு நகரத்திற்கு மீண்டும் செல்வார் ஆனால் அவர் பாடிய பாடல் மிகவும் பிரபலமடைந்துள்ளதால் இவரை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்பார்கள் அதுமட்டுமில்லாமல் ஜனகராஜ் தனுடன் வேலை செய்ய அழைப்பார் ஆனால் ரஜினி முடியாது என மறுப்பார் முதலில். பிறகு ரோஜா ரஜினியை உருகி உருகி காதலிப்பார் பிறகு ரஜினியிடம் அவரது தாயார் இறந்து போன மீனா இனி வரமாட்டார் என கூறி ரோஜாவை திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.
ரோஜா தன்னுடைய அப்பாவுக்கு ஆபரேஷன் என்பதால் வெளிநாட்டுக்கு சென்று விடுவார். அந்த சமயத்தில் வெள்ளத்தில் அடித்து சென்ற மீனா சுயநினைவு இல்லாமல் மீனவர்களுடன் இருப்பார் ஒருநாள் ரஜினியின் பாட்டை கேட்டு அவருக்கு சுயநினைவு திரும்புகிறது உடனே நகரத்திற்கு வந்து ரஜினியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணமும் செய்து கொள்வார். இந்த சமயத்தில் ரஜினி முத்துவாகவும் வீராவாகவும் இரண்டு வேடத்தில் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வருவார்.
இக்கட்டான சூழ்நிலையில் போலீசாரிடம் ரவுடியை பிடித்துக் கொடுக்க அந்த ரவுடி ரஜினியை பழி வாங்குவதற்காக இரண்டு மனைவிகளையும் கடத்திக் கொண்டு வைத்து இருவரும் ஒருவர் என நிரூபிக்க இப்படி ஒரு சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பார் ஒரு வழியாக வீராவும் முத்துவும் ஒருவரே என அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.
ஆனால் காதலித்த மீனா எனக்கு தான் வேண்டுமென ரஜினியை கூறுவார் அதே போல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவும் எனக்கு தான் என் புருஷன் வேணும் என சண்டை போட்டுக் கொள்வார்கள் இதனால் விரக்தி ஆகி தன்னுடைய சொந்த கிராமத்திற்கு ரஜினி செல்வார் அங்கு மீனா ரோஜா இருவரும் ரஜினியை வரவேற்பார்கள் இத்துடன் இந்த படம் முடிகிறது.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் 154 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. மேலும் வீரா திரைப்படம் அபொழுதைய காலகட்டத்தில் முதல் ஒரு கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை நிலைநாட்டியது. அது மட்டும் இல்லாமல் இன்றைய மதிப்பில் அதன் விலை 6.6 கோடி இந்திய ரூபாயிலும் அமெரிக்க டாலர் நிகராக 820000 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் ஒரு கோடி வசூல் செய்த திரைப்படம் ரஜினி திரைப்படம் தான் என தகவல் வெளியாகி உள்ளது.