Rajini uzhaippali : 1993 ஆம் ஆண்டு இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் உழைப்பாளி இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராதாரவி, ரோஜா, ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் படத்தை பி வெங்கட்ராம ரெட்டி தயாரித்திருந்தார் படத்துக்கு இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியவர்கள் இசையமைத்திருந்தார்கள்.
நிழல்கள் ரவி மற்றும் விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். விநியோகஸ்தர் சங்கம் ரஜினியின் திரைப்படத்தை வெளியிட தடை விதித்ததால் இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு யாருமே முன்வரவில்லை அதனால் உழைப்பாளி திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது இந்த பிரச்சனை காரணமாக கமலஹாசனை ரஜினி சந்தித்தார்.
அதுக்கு அடுத்த நாள் உழைப்பாளி திரைப்படம் விநியோகஸ்தர்கள் ஆதரவு இல்லாமல் திரையரங்குகளில் நேரடியாக வெளியிடப்படும் என அறிவித்தார் விநியோகஸ்தர் இல்லாவிட்டாலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்கள் திரையரங்கில் தொடர்ந்து வெற்றி திரைப்படம் ஆக ஓடி சாதனை படைத்தது.
உழைப்பாளி திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டியது நான் தான் என பொன்னம்பலன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அதாவது பொன்னம்பலனுக்கு காலில் அடிபட்டு இருந்ததால் உழைப்பாளி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் அதனால்தான் ரஜினி முத்து திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார் எனவும் கூறப்படுகிறது.
17 வருடமாக பிரபல நடிகரை ஒதுக்கி வைத்த த்ரிஷா.! 21 வருட சினிமா வாழ்க்கையில் மீண்டும் இணையும் தருணம்..
அதுமட்டுமில்லாமல் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த பொன்னம்பலத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்க ரஜினி தான் காரணம் என சமீபத்தில் அந்த பேட்டியில் பொன்னம்பலன் கூறியுள்ளார். உழைப்பாளி திரைப்படத்தில் பொன்னம்பலன் வில்லன் ரோலிங் நடித்து இருந்தால் இன்னும் படம் பயங்கர ஹிட் அடித்திருக்கும் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எது எப்படியோ உழைப்பாளி திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய சிக்கல் இருந்துள்ளது தற்பொழுது தான் தெரியவந்துள்ளது. ஆனாலும் அப்பவே கமலஹாசன் ரஜினிக்கு உதவி செய்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.
அந்தக் கருப்பாடு நீ தானா.. மாயா மீது கடும் கோபத்தில் பொருளை தூக்கி போட்டு உடைக்கும் பூர்ணிமா