விஜயகாந்தின் கம்பீரமான நடையை பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டில் பயந்து நடுங்கிய ரஜினி.? பல வருடம் கழித்து சொன்ன பிரபல நடிகர்.!

rajini
rajini

90 கால கட்டங்களில் ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கு இணையாக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் விஜயகாந்த். விஜயகாந்தை செல்லமாக மக்கள் ரசிகர்கள் என அனைவரும் கேப்டன் என அழைப்பது வழக்கம். விஜயகாந்த் ஆரம்பத்தில் கிராம கதைகளை தேர்வு செய்து நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

பின் போகப்போக ஆக்சன் மற்றும் வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென அரசியலிலும் களம் இறங்கி வெற்றி கண்டார். தொட்ட எல்லாத்திலும் வெற்றியை கண்டு ஓடிய விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இருப்பினும் விஜயகாந்த் பற்றிய செய்திகள் பல வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் அப்பா சித்தப்பா குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் டெல்லி கணேஷ் இவர் விஜயகாந்த் குறித்து அண்மையில் பேசி உள்ளார். விஜயகாந்த் நடந்து வந்தாலே அனைவரும் பயந்து தான் இருப்பார்கள் அந்த அளவிற்கு அடிப்பதுபோல கம்பீரமாக வருவார்.

அதை நான் பல படங்களிலும் பார்த்திருக்கிறேன் நேரிலும் பார்த்திருக்கிறேன் ஒரு தடவை நாங்கள் பாபா படத்தின் ஷூட்டிங்கில் உட்கார்ந்திருந்தோம் அப்பொழுது விஜயகாந்த் அம்பாசிடர் காரில் வந்து இறங்கி அடிக்க வருவது போல வந்தார் இவருக்கு பின்னாடியும் கூட்டமாக பலர் வந்தனர்.

அம்பாசிடர் காரை தொடர்ந்து பலர் வருவதை பார்த்து ரஜினியே பயந்து போய் யார் வர்றது என கேட்டார். பின் அது விஜயகாந்த் என தெரிந்தது அப்புறம் தான் அமைதியானார். அந்த அளவிற்கு கம்பீரமாகவும் வெளிப்படையாகவும் பேசும் நல்ல உள்ளம் கொண்டவராக விஜயகாந்த் இருந்தார் என கூறினார்.