மகள் மீண்டும் தனுசுடன் இணைவதால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரஜினி எடுத்த அதிரடி முடிவு.!

rajini
rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் ரஜினி மன உளைச்சலில் இருந்து வருவதாக கூறப்பட்டது ஆனால் தற்போது பயங்கர உற்சாகத்தில் இருக்கிறாராம்.

ஏனென்றால் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா மாப்பிள்ளை தனுஷ் தான் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து முடிவு செய்ததாக அறிக்கை வெளியிட்டதால் நடிகர் ரஜினிகாந்த் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறபடுகிறது. அதன் பிறகு இருவரும் தற்போது இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் இதைப் பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த் சிறு பிள்ளைகள் போல் துள்ளி குதித்து ஜாலியாகிவிட்டாராம்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ள போவதாக அறிக்கையை  வெளியிட்ட ரஜினிகாந்த் தற்போது இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆம் நடிகர் ரஜினிகாந்த் 170 வது படத்தோடு தனது சினிமா வாழ்க்கையை முடித்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் இணைந்த சந்தோஷத்தில் மேலும் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மகள் வாழ்வில் இருந்த பிரச்சனையை முற்றிலுமாக தீர்ந்ததால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மதியில் நிலவி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.