Rajini : தமிழ் சினிமாவில் இன்று மாபெரும் நடிகர்களாக பார்க்கப்படுவது ரஜினி மற்றும் கமல் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூலை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது மறுபக்கம் கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இன்றளவும் இருவரும் நல்ல நட்புடன் பழகி வருகின்றனர். இருவரும் மேடைகளில் மாத்தி மாத்தி புகழ்ந்து பேசிக்கொள்வது வழக்கம் அப்படி 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி கமலுக்கு பொன்விழா சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய ரஜினிகாந்த் நான் வளர்ந்து வந்த காலத்திலேயே கமல் பெரிய இடத்தில் நின்று இருந்தார் கோலிவுட் முன்னணி நாயகனாக கமல் வலம் வந்தார்.
அவர் சொன்னால் எல்லாம் நடக்கும் அப்பொழுது கூட என்னுடைய எந்த வாய்ப்பையும் அவர் பிடுங்க நினைத்தது இல்லை என்னை போட்டியாக நினைத்திருக்கலாம் ஆனால் பொறாமையாக நினைத்ததே இல்லை அவர் படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது நடுவில் நான் நைசாக நழுவி விடுவேன் ஒரு முறை என்னை பாலச்சந்தர் பிடித்துவிட்டார்.
எங்க போற தம் அடிக்கவா என கேட்டார் நானும் ஆமா சார் என்றேன். முதல்ல உள்ளே போ அங்க கமல் நடிச்சுகிட்டு இருப்பான் அதை போய் பாரு என அனுப்பிவிட்டார் நானும் உள்ளே போய் பார்த்து பிரமித்து விட்டேன் இவர் நடிப்பில் 50 சதவீதம் நடித்தாலே நாம் பெரிய நடிகராகி விடலாமே என எனக்கு தோன்றியது அவரைப் பார்த்து நடிப்பை கற்றுக் கொண்டேன்.
எனக்கு அவர் அண்ணன் மாதிரி என்றார் மேலும் கலைத்தாயிடம் கேட்டேன் நானும் உன் மகன் தானே கமலுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு நடிப்பு தருகிறாய் என கேட்டேன் அதற்கு அந்த தாயோ ரஜினி உனக்கு நடிப்பு இந்த ஜென்மத்தில் தான் ஆசை வந்தது கமல் ஒவ்வொரு ஜென்மத்திலும் நடிப்புடன் தொடர்ந்து வருகிறார்
. அதான் அவரை என்னுள் வைத்திருக்கிறேன் என்றார் என பேசி இருந்தார். நிகழ்ச்சியை முடிந்த கையோடு கமலுக்கு ரஜினி ஒரு பரிசையும் கொடுத்தார் அதில் கமலை தாயின் கையில் வைத்திருப்பது போலவும் ரஜினிகாந்த் கை பிடித்தது போலவும் இருக்கும் புகைப்படம் தான் அது.