Rajini : 72 வயதிலையும் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது.
ஜெயிலர் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் ரஜினிக்கு செக் மற்றும் சொகுசுகாரை பரிசாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170, லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார்.
ஒரு படத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் ரஜினி பல இடங்களில் இடம், வீடு, சொகுசு கார் என பலவற்றை குவித்து வைத்திருக்கிறார். திரை உலகில் பிஸியான நடிகராக வரும் ரஜினி இமயமலைக்கு சென்று நிம்மதியை தேடி வருகிறார் இப்படிப்பட்ட ரஜினி பழைய பேட்டி ஒன்றில் நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு சற்று யோசிக்காத ரஜினி. ஒருவேளை நான் நடிக்க வராமல் இருந்திருந்தால் டிராபிக் கண்ட்ரோலராக இருந்திருப்பேன் அப்படி இருந்திருந்தால் ஒரு நடிகனாக இப்ப இருக்கிற சந்தோஷத்தை விட இன்னும் அதிக சந்தோஷமாக இருந்திருப்பேன் என கூறியுள்ளார்.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நீங்கள் சொல்வது உண்மைதான் காசு அதிகமாக வைத்திருந்தாலும் பயம் தான். வெளியே தலையை காட்ட முடியாது ஆனால் நமக்கு பிடிச்ச வேலையை செய்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் எனக்கூறி அந்த பதிவிற்கு கமெண்ட்களை கொடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.