Rajini : அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது இதில் ரஜினி, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், நெல்சன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சனை மாற்ற சொன்னாங்க..
நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார் அந்த கதை பிடிச்சிருக்குன்னு சொன்னேன் பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து பத்து நாட்களில் விரிவாக கதை சொல்வதாக கூறினார் 10 நாளைக்கு பின் பீஸ்ட் ஷூட்டிங் முடிஞ்சு வந்து கதை சொன்னார் அற்புதமாக இருந்தது புரமோஷன் செய்து படத்தை அறிவித்தோம்..
அதன் பிறகு பீஸ்ட் வெளியானது.. படம் எதிர்மறையான விமர்சனங்களை கொண்டிருந்தது அது சரியாக போகவில்லை இயங்குனரை மாற்றுமாறு விநியோகஸ்தர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன நாங்கள் அனைவரும் சன் டிவி குழுவுடன் ஒரு சந்திப்பு நடத்தினோம் சன் டிவி டீம் சொன்னது உண்மை தான்..
சார் விமர்சனங்கள் மோசமாக உள்ளன ஆனால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் இல்லை பாக்ஸ் ஆபிஸ் நன்றாக இருக்கிறது என்று சன் டிவி டைம் என்னிடம் கூறியது இந்த படம் பாட்ஷா மாதிரி இருக்குமானு தெரியல ஆனா அதுக்கெல்லாம் மேல இருக்கும் நீங்கதான் பாத்துட்டு சொல்லணும் முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா..
பி வாசு, கேஎஸ் ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குனர்கள் என்னுடையே கேரியரை உயர்த்தியவர்கள் எப்பொழுது நெல்சனும் இந்த பாதையில் இருக்கிறார் நான் முதல் முறையாக ஹுக்கும் பாடல் வரிகள் பார்த்த பொழுது தாறுமாறாக இருந்தது அப்பொழுது ஒன்றை மட்டும் சொன்னேன் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் அதில் இருந்து எடுக்க சொன்னேன் சூப்பர் ஸ்டார் பட்டம் என்னைக்குமே தொல்லை தான்…
நான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க நீண்ட காலத்திற்கு முன்பில் கேட்டேன் அப்பொழுது சிலர் ரஜினி பயந்துவிட்டதாக கூறினார்கள் நான் இரண்டு பேருக்கு மட்டுமே பய்ப்பிடுவேன் ஒன்று கடவுளுக்கு மற்றொன்று நல்ல மனிதர்களுக்கு நல்ல வங்களோட சாபம் எப்பொழுதும் நம்மை காயப்படுத்தும் நல்லவர்களை நாம் புண்படுத்தக் கூடாது நல்லவர்களுக்கு பயப்பட வேண்டும்..
இதனை தொடர்ந்து காவலா பாடல் ஷூட்டிங் பேசிய ரஜினி நான் காவலா பாடல் ஷூட்டிங்காக காத்திருந்தேன் முதல் மூன்று நாட்கள் எனக்கு கால் வரவில்லை நான் கண்ணனிடம் கேட்டேன் அப்பொழுது அவர் நாளைக்கு ஷூட்டிங் அதுவும் ஒரு ஸ்டெப் என்றார் ஜனனி மற்றும் தமன்னா அந்த பாடலில் அசத்தியிருக்கிறார்கள் இதைத் தொடர்ந்து குட்டி கதை சொன்னார் சூப்பர் ஸ்டார்..
பறவைகளில் காகம் எப்பொழுதும் பலருக்கும் தொல்லை கொடுக்கும் ஆனால் பருந்து யாருக்கும் தொல்லையை தராது கழுகை கூட காகம் செய்யும் ஆனால் கழுகு எதுவுமே செய்யாது அது அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் காகம் அதற்கு போட்டியாக ஒரு கட்டம் வரை வரும் ஆனால் உயரமாக பறக்க முடியாது நான் காகம் சொன்னவுடனே..
இவரைத் தான் சொல்லுகிறேன் என்று சோசியல் மீடியாக்கள் சொல்லுவாங்க குறைக்காத நாயும் இல்லை குறை சொல்லாதவர்களும் இல்லை இது இரண்டும் இல்லாத ஊரும் இல்லை நாம் வேலையை பார்த்துட்டு போய்கிட்டு இருக்கணும் என ரஜினி பேசினார். மொத்தத்தில் தன்னை விமர்சித்தவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த குட்டி கதையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.