ரஜினி – சிறுத்தை சிவாவுக்கு செயின் கொடுத்ததை தொடர்ந்து அடுத்து நடக்கும் புதிய விஷயம் .? ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்.

rajini-and-siva
rajini-and-siva

சினிமா உலகில் ஒரு டாப் ஹீரோவாக இருக்கும் பிரபலங்கள் பலரும் ஒரு சில இயக்குனர்கள் கைகோர்த்து தொடர்ந்து மூன்று நான்கு படங்களில் நடிப்பார்கள். அந்த வகையில் அஜித் சொல்லவே வேண்டாம் சிறுத்தை சிவாவுடன் நான்கு முறை இணைந்து  தொடர் ஹிட் படங்களை கொடுத்தார்.

அதனை தொடர்ந்து அஜித் ஹச்.வினோத் உடன் கைகோர்த்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்த படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். அவரைப்போலவே தளபதி விஜய்யும் அட்லி உடன் கைகோர்த்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

தளபதி விஜய் அஜித்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தற்போது ஒருசில இயக்குனருடன் தொடர்ந்து படம் பண்ணி வருகிறார் அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அண்மையில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட்டடித்த காரணத்தினால் மீண்டும் ஒருமுறை இணைய வாய்ப்பு இருப்பதாக அப்போது பேசப்பட்டு வந்தது.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் வீட்டிற்கு அழைத்து தங்க செயினை பரிசாக அளித்தார் ரஜினி அப்போதே புரிந்து விட்டது மீண்டும் ஒருமுறை இணையப் போகிறார்கள் என்பதும் தற்போது  சினிமா வட்டாரங்களில் சைடிலிருந்து பேசப்பட்டு வருகின்றன. ரஜினி எப்படி எதிர்பார்கிறாரோ அதற்கு ஏற்றார் போல கதையை கொடுக்க சிறுத்தை சிவாவும் ரெடியாக இருப்பதாக தெரியவந்து உள்ளது.

ஆனால் இதை இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரஜினி அடுத்ததாக தேசிங் பெரியசமி கார்த்திக் சுப்புராஜ் கே எஸ் ரவிகுமார் போன்ற டாப் இயக்குனர்களும் ஒரு பக்கத்தில் இருக்கின்றனர் இருப்பினும் ரஜினியை முடிவே இறுதியானதாகும்.