ரஜினி, கமலுக்காக ஒரு மாஸான கதையை எழுதி வைத்திருக்கும் பிரபல இயக்குனர் – சரியான நேரத்திற்காக வைட்டிங்..

rajini-and-kamal-

தமிழ் சினிமா உலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர்கள் ரஜினி-கமல்.  இவர்கள் இருவரும் அண்மை காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து வருகின்றனர் குறிப்பாக ரஜினி வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து தன்னை தக்கவைத்துக் கொண்டார்.

ஆனால் கமலோ கடந்த நான்கு வருடங்களாக சினிமா உலகில் படங்களில் நடிக்காமல் வியாபாரம் அரசியல் போன்றவற்றில் தலை காட்டி வெற்றி பெற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை அவருக்கு பிடித்து போக கமலஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகிற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து  நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 169 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி இதற்கான வேலைகளில் மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மலையாளத்தில் வெளியான நேரம் என்னும் படத்தை இயக்கி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அல்போன்ஸ் புத்திரன்.

அதனை தொடர்ந்து நிவின் பாலியை வைத்து 2015 ஆம் ஆண்டு பிரேமம் என்னும் படத்தையும் இயக்கினார் இந்தப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்து இந்திய அளவில் பேசப்பட்டது அல்போன்ஸ் புத்திரன் என்ற இயக்குனரின் பெயரும் இந்திய அளவில் பேசப்பட்டது இப்படி இருக்கின்ற நிலையில் அல்போன்ஸ் புத்திரன் தனக்கு  இருக்கும் ஆசை குறித்து தெரிவித்துள்ளார் அதாவது கமல் சார் அல்லது ரஜினி சார் யாரையாவது ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதையை நிச்சயம் கூறுவேன் இந்த கதை அவர்களுக்கு கண்டிப்பாக பிடித்து போக வாய்ப்பு உள்ளது.

ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லாதது போல் தோன்றுகிறது ஏனென்றால் இதுவரை ரஜினி கமல் இருவரையும் என் வாழ்நாளில் ஒருமுறைகூட நேரில் சந்தித்ததில்லை. ஒருவேளை எனக்கு அதிர்ஷ்டம் எதிர்காலத்தில் இருந்தால் ரஜினி சார் மற்றும் கமல் சாரை சந்திக்க நேரிடும் அவர்களிடம் எனது கதையை கூறுவேன் அவர்களுக்கு அது பிடித்திருந்தால் கண்டிப்பாக எனது முழு திறமையையும் போட்டு ஒரு நல்ல பொழுதுபோக்கான ஒரு சிறப்பான படத்தை எடுத்துக் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

puthiran
puthiran