ரஜினி : நீ இப்படி பண்ணிட்டு இருந்த உன்ன எல்லோரும் பொம்பள பொறுக்கின்னு சொல்லுவாங்க – நேருக்கு நேர் சொன்ன பிரபல நடிகர் – யார் அது தெரியுமா.?

rajini

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ஆகியவை வெளிவந்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த காரணத்தினால் அண்ணாத்த படத்தை  எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்திய மேடைப்பேச்சு ஒன்றில் தன்னை ஒரு நடிகர் பொம்பள பொறுக்கி என்று கூறிய செய்தியைக் கூறி பாசிட்டிவான சில விஷயங்களையும் சொல்லி உள்ளார் அவர் யாரை குறிப்பிட்டு உள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஒருமுறை ரஜினியும் சூரியாவின் அப்பா சிவகுமாரும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் அப்போது அவரவர் காட்சிகள் முடிந்த பிறகு ஓய்வெடுப்பது வழக்கம். சிவகுமார் எப்பொழுதும் பெண்களிடம் பேசாமல் புக் படிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் ரஜினியோ தனது ஷூட்டிங் முடிந்தால் நடிகைகளுடன் உட்கார்ந்து ஜாலியாக பேசுவாராம். இது சிவகுமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் ரஜினியும் அந்த நடிகைகளை பார்த்து நீங்கள் என்னுடன் மட்டும் பேசுகிறீர்கள் அவருடன் பேசவில்லை என்பது கேட்பாராம்.

அதற்கு நடிகைகள் அவர் ஒரு சாமியார் அவர் பெண்களிடம் பேச மாட்டார் அப்படியே போய் பேசினாலும் ஏதாவது அறிவுரை கொடுப்பார் என சொல்லி விட்டார்களாம் ரஜினியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம் ஆனால் ரஜினியை சிவகுமார் பல தடவை தொடர்ந்து பார்ப்பாரம் எப்பொழுதும் பெண்களுடன் பேசிக் கொண்டுதான் இருப்பாராம் ரஜினி. ஒரு தடவை அசிஸ்டன்ட் கூப்பிட்டு இரண்டு பக்கம் ஒரு டயலாக்கை எழுதி இன்று மாலை சூட்டிங் என்று கொடுத்து சொல்ல சொன்னாராம். அதற்கேற்றார்போல இரண்டு பக்கம் உள்ள ஒரு டயலாக்கை கொடுத்துவிட்டாராம் அசிஸ்டன்ட்.

ரஜினியும் மதிய சாப்பாடு கூட சாப்பிடாமல் இரண்டு பக்கம் உள்ள அந்த டயலாக்கை பேசி கொண்டு சாயந்திரம் ஷூட்டிங்கிற்கு ரெடியானபோது சிவகுமார் வந்து இப்பொழுது சூட்டிங் எல்லாம் ஒன்னும் கிடையாது என கூறினாராம். என்ன காரணம் என கேட்டதற்கு நான் தான் இரண்டு பக்கம் உள்ள ஒரு டயலாக்கை எழுதிக் கொடுக்கச் சொன்னேன் நீ உனது காட்சிகள் முடிந்த பிறகு நீ அடுத்த காட்சிகளுக்கு ரெடியாகாமல் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

சுற்றி இருப்பவர்களும் மக்களை உன்னை பொம்பள பொறுக்கி என்று நினைத்துக்கொள்ள மாட்டார்களா ஏன் இவ்வாறு செய்தாய் என கூறி ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் சிவகுமார் அதன் பிறகு ரஜினி எந்த ஒரு படமாக இருந்தாலும் தனது காட்சிகள் முடித்த பிறகு பெண்களுடன் போய் உட்கார்ந்து அரட்டை அடிக்க மாட்டாராம் தனது வேலை ஒன்றுதான் தான் உண்டு என இருப்பாராம். இச்செய்தியை மேடை ஒன்றில் கூறினார் ரஜினி.