காலத்திற்கு ஏற்றவாறு சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது அதற்கு ஏற்றவாறு நடிகர்களும் தன்னை அப்டேட் செய்து கொண்டு சிறப்பாக பயணித்தால் மட்டுமே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியும் என்பது வழக்கம் மேலும் கதைகளமும் அதற்கு ஏற்றார்போல ஆராய்ந்து நடிக்க வேண்டும் அதைத்தான் 40 வருடங்களாக சிறப்பாக செய்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அதனால் தான் அவரது இடத்தைப் பிடிக்க தற்போதும் திணறி வருகின்றனர் நடிகர்கள். தர்பார் திரைப்படத்தின் சுமாரான வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுத்து மீண்டும் சில வருடங்கள் அசைக்க முடியாத அளவிற்கு கொள்ளவது ரஜினியின் கனவு அதற்காகவே சிறப்பாக நடித்துள்ளார் அந்த வகையில் ரஜினி அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் இது அப்படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. அண்ணாத்த படப்பிடிப்பும் தற்போது முடிந்து உள்ளது.
மிக விரைவிலேயே ரஜினியின் அடுத்த படத்தை நடிக்க ஆயுதமாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பரவுகின்றன இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரின் மகனான விஷ்ணு மஞ்சு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவரது அப்பா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார் அவருடன் ரஜினி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அது தற்பொழுது வைரலாகி வருகிறது மேலும் ரஜினியும் மோகன்பாபுவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் வழக்கம். சமீபத்தில் கூட சூரரைபொற்று திரைப்படத்தில் இவர் ஆர்மி மேனேஜராக நடித்திருப்பார் என்பதும்கூட குறிப்பிடதக்கது.