கமல் வீட்டு வாசலில் நின்ற ரஜினி.. பார்த்தும் பார்க்காத போல் இருந்த பிரபலங்கள்.! இப்படியெல்லாம் நடக்குமா

Rajini
Rajini

Rajini : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டு இருக்கிறார்கள் ரஜினி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கமல்  சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் ஆனால் ரஜினி அப்படி கிடையாது குடும்ப வறுமை அதனால் கண்டக்டராக வேலை பார்த்தார்.

அந்த சமயத்தில் அவருடைய நண்பர்கள் உனக்கு நடிப்பு திறமை இருக்கு நீ சினிமாவில் நடி என சொல்லி உள்ளார்கள் இதனை அடுத்து அவர் சென்னை வந்தார். இயக்குனர் பாலச்சந்தரை பார்த்தார்  ரஜினிக்கு தமிழ் அந்த அளவு வராததால் தமிழ் கற்றுக் கொண்டு வா என கூறிவிட்டாராம்.

ஒரு மாதம் கழித்து தமிழ் கற்றுக்கொண்டு ரஜினி வந்தார் அதனை அடுத்து அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை நடிக்க வைத்தாராம் அதில் கமல் ஸ்ரீவித்யா நாகேஷ் ஜெயசுதா மற்றும் பலர் நடித்திருந்தனர் கே பாலச்சந்தர் தான் அந்த படத்தை இயக்கினார் எம் எஸ் விஸ்வநாதன் அந்த படத்திற்கு இசையமைத்து வந்தார்.

இந்த படத்தின் சூட்டிங்கிற்கு கவிதாலயா காரில் தான் நடிகர்கள் நடிகைகளை அழைத்து வந்துள்ளனர். அப்படி ரஜினி, ஸ்ரீவித்யாவை அழைத்துக் கொண்டு கமலை அழைக்க கார் போனது. அதன் பிறகு தான் கமல் எந்திரிச்சி கிளம்புவாராம் ஸ்ரீவித்யா கமல் வீட்டுக்குள் சென்று உட்கார்ந்து விடுவாராம்..

ரஜினி அப்பொழுது புதுமுக நடிகர் என்பதால் கமல் வீட்டுக்கு உள்ளே போக தயங்குவார்களாம் மேலும் அங்கு இருந்தவர்களும்  ரஜினியை கூப்பிட மாட்டார்களாம் இதனால் வீட்டு வாசலிலேயே அவர் ஒரு ஓரமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பாராம் இதனை கமலின் அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி   ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.