தனுஷ், ஐஸ்வர்யாவை நினைத்து தான் ரஜினி அந்த டயலாக்கை மனவலியுடன் பேசினார்.? உண்மையை உடைத்த இயக்குனர்

Actor Rajini

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டுமே சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூல் குறைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்  ரட்சகன், ஸ்டார், துள்ளல் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றியை கண்ட பிரவின் காந்தி ஜெயிலர் படம் குறித்து பேசியது வைரலாகி வருகிறது..

praveen gandhi
praveen gandhi

அவர் சொன்னது.. ஜெயிலர் படம் ஏன் இவ்வளவு பெரிய ஹிட்டானது என்றால் படத்தின் கிளைமாக்ஸ் ரஜினி அப்பாகிட்ட ஏதாவது சொல்ல விரும்புரியாப்பா என்ற டயலாக்கை இரண்டு, மூன்று முறை பேசி இருப்பார். அதில்  ஒரு வலி இருந்தது அது வெறும் டயலாக் கிடையாது அது ரஜினி உடைய வாழ்க்கை அந்த டயலாகிற்கு பின்னால் அவர் தனுஷை மனதில் நினைத்திருக்கலாம்..

தனது மகளை ஐஸ்வர்யாவை மனதில் நினைத்திருக்கலாம் ஏனெனில் விவாகரத்து என்பது ஒரே இரவில் எடுத்த முடிவாக் இருக்கும் அது எவ்வளவு நாள் ரஜினியின் காதிற்கு வந்திருக்கும்  அது குறித்து ரஜினி அவர்களிடம் கேட்கவும் முடியாது எனவே ஜெயிலர் படத்தில் அப்பா கிட்ட ஏதாவது சொல்ல விரும்புரியாப்பா என்ற டயலாக்கை படத்தில் ரஜினி பலமுறை பேசி இருப்பார்.

அப்பொழுது டாப் அங்கிளில் ரஜினி சிரிப்பதை காட்டியிருப்பார்கள் அந்த சிரிப்பு சினிமா கிடையாது அந்த சிரிப்புக்கு பின்னால் தான் தனுஷ் இருக்கிறார். அந்த சிரிப்புக்கு பின்னால் ஐஸ்வர்யா இருக்கிறார் என பிரவின் காந்தி பேசி உள்ளார்.