தமிழ் திரையுலகில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி, தன்னுடைய மிக ஸ்டைலான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டவர் ரஜினிகாந்த், தற்பொழுது இவர் தர்பார் திரைப்படத்திற்கு அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு அடுத்தது யார் வருவார் என பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள் அதேபோல் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்காக பல ரசிகர்களும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள், இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த சூப்பர் ஸ்டார் என்ற பதவி பற்றி சாமி திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசியுள்ளார்.
அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்ற பதவி ஒரு காவல்துறை அதிகாரி போல, ஏன் ஒரு cm மற்றும் pm போலவும் கூறலாம். இதற்கு எந்த ஒரு நிரந்தரமான இடமும் இல்லை எனக்குப் பிறகு யார் திரை உலகில் முன்னணி இடத்தில் இருக்கிறாரோ அவர்தான் இந்த பதவிக்கு வருவார் என அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.