சினிமா உலகம் புதியதை நோக்கிப் போகப் போக ரசிகர்கள் ஹீரோ-ஹீரோயின் கதாபாத்திரத்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த நடிகர்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.
அந்த வகையில் 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தி வருவர் எம்எஸ் பாஸ்கர். இவர் காமெடியனாக தமிழ் சினிமாவுலகில் அறிமுகமாகி இருந்தாலும் நாட்கள் போகப்போக குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார்.
குறிப்பாக டாப் நடிகரான ரஜினி கமலுடன் நடித்து அசத்தியுள்ளார் கமலுக்கு ரொம்ப பிடித்துப் போன நடிகரும் எம்எஸ் பாஸ்கர் தான் அதை பலர் மேடைகளில் கமலே சொல்லி உள்ளார் கமலுடன் இவர் இணைந்து பாபநாசம், உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் எம்எஸ் பாஸ்கரை ரஜினி சந்தித்து உள்ளார் அப்பொழுது அவர் கூறியது வாங்க பாஸ்கர் உங்களுடன் நடிப்பது ரொம்ப சந்தோஷம் என கூறி உள்ளார் அதற்கு எம்எஸ் பாஸ்கர் என்ன அண்ணா இப்படி சொல்றீங்க உங்க கூட ஒரு காட்சியில் நடித்த விடக் முடியாதா என பல நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தேன்.
சொல்லப் போனால் 20 வருடமா நான் தவித்து உள்ளேன் என கூறினார் அதற்கு ரஜினி இரண்டும் ஒன்றுதான் என சொல்லி கிளம்பி விட்டாராம் இதை ரஜினி சொன்ன உடன் எம்எஸ் பாஸ்கர் அப்பொழுது ஷாக் ஆகி விட்டாராம். எம்எஸ் பாஸ்கர் தற்போது தமிழ் சினிமா உலகில் அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.