நடிகைக்கு முக்கியத்துவமான கதையில் ஸ்கோர் செய்த ரஜினி.. அதுக்கெல்லாம் தில்லு வேணும் – புகழ்ந்து தள்ளும் எஸ் ஜே சூர்யா

Sj Surya
Sj Surya

Rajini : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருவர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்  அதிகம் தோல்வி படங்களை கொடுத்தது கிடையாது. ஆனால் ஒரு தோல்வி படம் கொடுத்தால்  அடுத்து ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடியதால் ரஜினி விமர்சிக்கப்பட்டார்.

உடனே நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்தார். படத்தை ரசிகர்கள் மற்றும் மக்கள் போட்டி பார்த்தனர் அதன் காரணமாக வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது இதுவரை மட்டுமே 700 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி படும் பிஸியாகிவிட்டார் கைவசம் லால் சலாம் மற்றும் ஜெய் பீம் படத்தை இயக்கிய வெற்றிகண்ட ஞானவேலுடன் உடன் ஒரு படம் பண்ணுகிறார்.

அடுத்து லோகேஷ் உடன் ஒரு படம் பண்ணவும் திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ஞானவேல் இயக்கம் படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் என்பதால் ரஜினியுடன் இணைந்து அமிதாபச்சன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா பேசியது இணையதள பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாபா படம் தவறாக போன பிறகு ரஜினியின் தன்னை முழுக்க ரீ ஸ்டார்ட் செய்து கொண்டார்.

அப்படி ரீ ஸ்டார்ட் செய்த உடனேயே சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்த படம் முழுக்க முழுக்க பெண் சப்ஜெக்ட் ஓரியன்ட் படமாக இருந்தாலும் படம் முழுக்க ரஜினி அமைதியாக இருந்து கடைசியில் லக்கலக்கா போட்டு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கைத்தட்டல் வாங்கினார் இதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும் என கூறினார்.