படத்துல என்னை ஏமாத்துறாங்க.. ஹிட் அடிக்காது என புலம்பிய ரஜினி.! கடைசியில் செஞ்சி விட்ட தயாரிப்பு நிறுவனம்

Rajini
Rajini

Rajini Yajaman Movie :  42 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

அடுத்து ரஜினி தனது மகள் இயக்கும் லால் சலாம், தலைவர் 170, 171 போன்ற படங்களிலும் நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். ரஜினி எப்பொழுதுமே படத்தில் ஆக்சன், காமெடி, பாடல் என அனைத்தும் கலந்த கமர்சியல் படங்களை தேர்வு செய்து நடிக்கிறார் அதனாலே அவருடைய வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கிறது.

அப்படி 1993 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் எஜமான் இந்த படத்தை ஆர்வி உதயகுமார் இயக்கி இருந்தார். ரஜினியுடன் இணைந்து மீனா, செந்தில், கவுண்டமணி, நெப்போலியன் என பலரும் நடித்திருந்தனர் படம் வெளிவந்து வெற்றி பெற்றது. படத்தில் மீனா கற்பமாக இருப்பதாக பொய் சொல்லி ரஜினியை சந்தோஷப்படுத்துவார்.

கடைசியில் ரஜினி ஏமாறுவதோடு மட்டுமில்லாமல் மீனாவையும் பறிகொடுத்து விடுவார் கதை இப்படி தான் நகரும்..  படத்தின் சூட்டிங் முழுவதும் முடிந்த பின்  ரஜினிக்கு இந்த கதை பிடிக்கவில்லையாம். நம்மை படத்தில் ஏமாற்றுகிறார்கள் என்னுடையே ரசிகர்களும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என ரஜினி கோபத்தில் இருந்து உள்ளார்.

Yajaman
Yajaman

ஆனால் படம் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது அதற்கு காரணம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் இந்த கதையின் நேர்மறையான கருத்துக்களை மட்டும் பத்திரிகையில் வெளியிட்டனர் மேலும் படத்தில் வரும் காமெடியை மையப்படுத்தி விளம்பரப்படுத்தியதுதான் எஜமான் படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் பாடல்கள் பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் உருவாக காரணமே  விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் வெற்றி பெற்றதை பார்த்த ரஜினியை இது போன்ற ஒரு கதையில்  நடிக்க வேண்டும் என்றாராம் அப்படிதான் ஆர் வி உதயகுமார் சொன்ன எஜமான்  கதையில் ரஜினி நடித்தார்.