vijayakanth : நடிகர் விஜயகாந்த் எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் மதுரையிலிருந்து நடிக்க வந்தவர் இவர் வாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இவர் கருப்பாக இருந்ததால் பலரால் அசிங்கப்பட்டுள்ளார் அவமானப்பட்டுள்ளார். விஜயகாந்தின் ஒரிஜினல் பெயர் விஜயராஜ் ஆனால் தனது பெயரை ரஜினியை பார்த்து விஜயகாந்த் என வைத்துக் கொண்டார்.
ரஜினியை பார்த்து நேரில் பேசிய பொழுது தான் விஜயகாந்த் அவர்களுக்கு நடிப்பதில் அதிக ஆர்வம் வந்தது என ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் இந்த விஷயம் வெளியானது. விஜயகாந்த் முதன் முதலில் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் வில்லனாக தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயகாந் தூரத்தை இடி முழக்கம் என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியது.
தமிழ் சினிமாவில் ஆக்சன் திரைப்படத்தின் குறையை தீர்த்தவர் விஜயகாந்த் தான் அந்த அளவு ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களுடன் எந்த ஒரு முன்னணி நடிகர்களும் இணைந்து நடிக்க மாட்டார்களாம். அந்த அளவு விஜயகாந்தை ஒதுக்கி வைத்தது சினிமா உலகம். விஜயகாந்த் அவர்களுடன் நடிக்க மறுத்த பல நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள்.
அதனால் விஜயகாந்த் அவர்களுக்கு பல திரைப்படங்களின் வாய்ப்பு கைமீறிப் போய் உள்ளது. அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி வைத்து பல திரைப்படங்களை இயக்கியவர் பி மாதவன் இவர் இயக்கத்தில் அன்னை இல்லாம், எங்க ஊரு ராஜா, ராமன் எத்தனை ராமனடி, தெய்வத்தாய் வியட்நாம் வீடு, பட்டிக்காடா பட்டணமா என பல திரைப்படங்களை இயக்கினார் அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் என் கேள்விக்கென்ன பதில்.
இந்த திரைப்படத்தில் ரஜினி தான் ஹீரோ ரஜினிக்கு தம்பியாக நடிக்க விஜயகாந்த் அவர்களை மாதவன் அணுகியுள்ளார் இதனை விஜயகாந்த் அவர்களிடம் சொன்னவுடன் எம்ஜிஆர், சிவாஜியை வைத்து படத்தை இயக்கியவர் நீங்கள் சொல்லி நான் மறுப்பேனா கண்டிப்பாக நடிக்கிறேன் என உத்தரவாதம் கொடுத்துள்ளார். விஜயகாந்த் நடிக்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் இயக்குனரை அழைத்து இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உடனே இயக்குனர் மாதவன் என்ன விஷயம் எதுவாயிருந்தாலும் நேரடியாக கூறுங்கள் எனக் கூறியுள்ளார் உடனே ரஜினி நான் யாருடனும் இணைந்து நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறேன் இணைந்து நடிப்பதை விட்டு விட்டேன் என கூறியுள்ளார் அதற்கு மாதவன் நீங்கள் இந்த திரைப்படத்தில் ஹீரோ தான் உங்களுக்கு தம்பியாக தான் விஜயகாந்த் நடிக்கப் போகிறார் எனக் கூறினார்.
ரஜினி திட்டவட்டமாக என்னால் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து நடிக்க முடியாது எனக் கூறிவிட்டார், உடனே அந்த திரைப்படத்திலிருந்து விஜயகாந்தை தூக்கினார்கள் பிறகு தான் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தில் அண்ணன் தம்பியாக நடித்திருந்தார். விஜயகாந்த் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகிறது அப்பொழுது விஜயகாந்த் திரைப்படமும் வெளியானது ஆனால் விஜயகாந்த் திரைப்படம் ரஜினி திரைப்படத்தின் வசூலை விட அதிக வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.