தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வாத்தி” திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் 100 கோடியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் “கேப்டன் மில்லர்” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இவர் சினிமா உலகில் ஒரு நடிகனாக மட்டும் தன்னை வெளி காட்டிக் கொள்ளாமல் பாடகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு திரை உலகில் ஜொலிக்கிறார். நடிகர் தனுஷ்க்கு நடிப்பை தாண்டி இயக்குவதில் ரொம்ப ஆர்வம் அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் பண்ண ஆசைப்பட்டுள்ளார் தனுஷ்.
முதலில் ஒரு கதையை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சொல்லி உள்ளார் அந்த கதையில் மாஸ் சீன், பஞ்ச் டயலாக் என எதுவும் இல்லாமல் இருந்ததால் ரஜினி அந்தக் கதையில் நடிக்க மறுத்து விட்டாராம். பிறகு அந்த கதையை நடிகர் ராஜ்கிரனுக்கு சொல்லி நடிக்க வைத்தாராம் அந்த படம் தான் பவர் பாண்டி..
தனுஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங், மடோனா செபஸ்டியன், தனுஷ் போன்றவர்கள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரனின் சிறுவயது கதாபாத்திரத்தில் தனுஷ் சூப்பராக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் வரும் பாடல்களும் இன்றுவரை ரசிகர்களுக்கு ரொம்பவும் ஃபேவரடான பாடலாக இருந்து வருகிறது. ரஜினி தூக்கி எறிந்த பவர் பாண்டி கதை பின் நாட்களில் படமாக வந்து மாபெரும் வெற்றி பெற்றது சூப்பர் ஸ்டாருக்கு அதிர்ச்சி கொடுத்ததாம்.