சினிமாவைப் பொறுத்த வரையில் ஒரு திரைப்படம் ஒரு மொழியில் ஹிட் அடித்துவிட்டால் அந்த திரைப்படத்தை விரைவாக மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம் அந்த வகையில் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் நடித்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்தான் டான் இந்த திரைப்படம் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்றதால் இதனை தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் பில்லா என பெயர் வைத்து 1980ஆம் ஆண்டு ரீமேக் செய்தார்கள் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா மேஜர் சுந்தரராஜன் தேங்காய் சீனிவாசன் என பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது அதுமட்டுமில்லாமல் ரஜினி திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.
பிறகு இந்த திரைப்படத்தை விஷ்ணுவரதன் அவர்கள் ரீமேக் செய்ய ஆசைப்பட்டார். அதற்காக விஷ்ணுவரதன் ரஜினியை சந்திக்க சென்றார் அப்பொழுது ரஜினி அவர்கள் இந்த திரைப்படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என படக்குழுவினரிடம் கேட்டுள்ளார் அதற்கு இன்னும் எந்த நடிகரையும் தேர்வு செய்யவில்லை எனக் கூறினார்கள் உடனே ரஜினிகாந்த் பில்லா திரைப்படத்தில் இந்த காலகட்டத்தில் அஜீத் நடித்தால் சிறப்பாக இருக்கும் என சிபாரிசு செய்துள்ளார்.
உடனே படக்குழுவினர் அஜித்தை சந்தித்து பில்லா கதையை கூறியுள்ளார் மேலும் ரஜினி நடித்த பில்லா படத்தின் கதை போலவே இந்த திரைப்படமும் இருந்தாலும் திரைக்கதையில் தல அஜித்துக்கு ஏற்றது போல் படத்தை மாற்றி எடுத்திருப்பார்கள் இயக்குனர் விஷ்ணுவரதன். இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் என மிக முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது அதுமட்டுமல்லாமல் ரஜினி கூறியதுபோல் அஜித் நடித்ததால் தான் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. அதேபோல் அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாகவும் பில்லா திரைப்படம் அமைந்தது.