Rajini : சினிமா உலகில் பல வருடங்களாக இருப்பவர்களுக்கு தெரியும் கதை கேட்கும்போது இந்த படம் ஓடும் ஓடாது மேலும் அந்த கதையில் எந்த நடிகர், நடிகைகள் நடித்தால் படம் ஹிட் ஆகும் என்பதை வரை கணித்து வைத்திருப்பார்கள் அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை கேட்கும் பொழுது அந்த படம் ஹிட் அடிக்குமா? அடிக்காதா என கணித்து விடுவாராம்.
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது ஆனால் இந்த படம் நடிக்க போவதற்கு முன்பாகவே பலரும் இந்த கதையில் நடிக்க வேண்டாம் ஏனென்றால் இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பு எடுத்த பீஸ்ட் சரியாக போகவில்லை என பலரும் விமர்சித்துள்ளனர் ஆனால் ரஜினி கதை மீது நம்பிக்கை வைத்து நடித்தார்.
அரசனாக மிரட்டும் அஜித்.. இந்த கம்பீரம் யாருக்கு வரும்.!
வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று 600 கோடிக்கு மேல் அள்ளி வெற்றிகண்டது அதனைத் தொடர்ந்து கைவசம் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதேபோல திறமையான நடிகர்களையும் வளர்த்து விட்டுள்ளார் அந்த வகையில் ராகவா லாரன்ஸ் சின்ன வயதாக இருக்கும் போது அவருடைய நடன திறமையை பார்த்து..
“இவன் பின் நாட்களில் பெரிய நடன நடிகராக வருவான்” என கணித்தார். அதேபோல் புதிய பாதைக்கு முன் ரஜினியை வைத்து படம் இயக்க பார்த்திபன் ஆசைப்பட்ட பொழுது அந்த தயாரிப்பாளர் நீங்கள் பார்த்திபனை ஹீரோவாக போட்டு படம் எடுங்கள் என ரஜினி சொன்னாராம் அது பின் நாட்களில் ஒர்க் அவுட் ஆனாதாம்.
சந்திரமுகி படப்பிடிப்பின் போது கூட ஜோதிகாவின் நடிப்பை கவனித்து வந்தாராம் ஜோதிகாவின் கண்களை மானிட்டரில் பார்த்துவிட்டு இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் அதற்கு ஜோதிகா முக்கிய காரணமாக இருப்பார் என சொன்னாராம் பின் நாட்களில் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு மட்டும் அல்லாமல் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா மிரட்டியதை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்.