தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கெத்தாக வலம் வரும் நடிகர் தான் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்துவிடும்.
அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்பொழுது ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இவரது கதாபாத்திரம் முடிந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக இந்த திரைப்படத்தின் இயக்குனரே ஒரு பேட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
மேலும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் இருக்கிறார் அதனை தொடர்ந்து பார்த்தால் தனது அடுத்த திரைப்படத்தையும் தேர்ந்தெடுத்து விட்டார் என தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது இவர் ஒரு மேடையில் பேசிய விஷயம் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பற்றி தான் நடிகர் ரஜினி என்.டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் பேசியுள்ளாராம்.
அதில் நடிகர் பாலகிருஷ்ணா தட்டினால் ஜீப் 20 அடியில் இருந்து 30 அடி தள்ளிப்போகும் ஆனால் அமிதாப் பச்சன்,ரஜினிகாந்த்,ஷாருக்கான், சல்மான் கான் போன்ற எந்த நடிகர்கள் செய்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஆனால் இவர் செய்தால் மட்டும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என பேசிய விஷயம் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மேடையில் பேசிய ரஜினி பல விஷயங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தாராம் இதை தொடர்ந்து ரஜினியின் திரைப்பயணத்தில் ஜெயிலர் திரைப்படம் அவருக்கு மிகவும் முக்கியமான திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் பலரும் தற்பொழுதே தங்களது கருத்துகளையும் தெரிவித்தும் வருகிறார்கள்.