சினிமா உலகில் வாரிசு நடிகர், நடிகைகளின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் கமலைத் தொடர்ந்து அவரது இரு மகள்களான ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் சினிமா உலகில் தொடர்ந்து நடித்து வருகின்றனர் இவர்களைப் போல ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா..
முதலில் பாடகராக திரையுலகில் நுழைந்து பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதலில் தனுஷை வைத்து 3 என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து “வை ராஜா வை” என்னும் படத்தை எடுத்தார் இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா..
திடீரென லால் சலாம் என்னும் தலைப்பில் ஒரு படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தமான ஒரு படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார் இந்த படத்திற்காக அவர் ஏழு நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் வெகு விரைவிலேயே இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.. இதுவரை எடுக்கப்பட்ட காட்சியை ரஜினிகாந்த்திடம் போட்டு காட்டி உள்ளார் ஐஸ்வர்யா..
படத்தை பார்த்த ரஜினி மிரண்டு போய்விட்டாராம். நம் குடும்பத்தில் இப்படி ஒரு சிறந்த இயக்குனரா என்று தன் மகளை புகழ்ந்து விட்டார் ரஜினி என தகவல் வெளியாகி உள்ளது. தந்தையின் பாராட்டல் அடுத்தடுத்த ஷூட்டிங்கை நல்ல முறையில் எடுக்கவும் ஐஸ்வர்யா இருக்கிறாராம்.. இந்த தகவல் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.