Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மற்றும் சமூக அக்கறை கலந்த ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலில் 200 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. திரையுலகில் வருடத்தில் ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் அஜித் நிஜ உலகிலும் சரி, சினிமாவிலும் சரி எப்பொழுதுமே நேருக்கு நேராக பேசும் மனம் உடையவர்.
மேலும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் பலருக்கும் பிடித்தவராக அஜித் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் அஜித், ரஜினி பற்றி பேசியது தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது அவர் சொன்னது என்னவென்றால்..
கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் போது எங்ககளை மிரட்டுகிறார்கள் என்று அவரை வைத்துக்கொண்டு தைரியமாக பேசிவிட்டார் அஜித் அது அப்பொழுது பெரிய பிரச்சினையாக மாறியது கோடிக்கணக்கான தொண்டர்களாக இருக்கும் கட்சி திமுக அஜித் அப்படி பேசியது அடுத்து பலரும் அஜித்தை மிரட்டினர்.
உன்னை காலி பண்ணி விடுவேன்.. வீடு இருக்காது என்றெல்லாம் மிரட்டினார்கள் அப்பொழுது ரஜினிகாந்த் தான் கருணாநிதியிடம் அப்பாயின்மென்ட் வாங்கி மறு நாளே சந்திக்க ஏற்பாடு செய்தார் அதன் பிறகு தான் கட்சிக்காரர்கள் அமைதியாகி விட்டார்கள் என்று கூறியுள்ளார். இந்த பிரச்சனையை ரஜினி தீர்த்து வைக்க காரணம் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித் பேசியதற்கு ரஜினி தான் ஏஞ்சி கைதட்டி இருப்பார்.