நக்மா தவறவிட்ட பட வாய்ப்பு… ஒட்டுமொத்த நடிகைகளும் நடிக்க ஆசைப்படும் இந்த நடிகர் திரைப்படத்தையா.!

nagma
nagma

rajini padayappa : நடிகை நக்மா, தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நடிகையாக நடித்து வந்தவர் இவர் முதன் முதலாக பிரபுதேவாவின் காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நக்மா தவறவிட்ட திரைப்படம் குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. 1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகிய திரைப்படம் தான் படையப்பா இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, அப்பாஸ், வடிவுக்கரசி, லக்ஷ்மி, ராதாரவி, சித்தாரா, அனுமோகன்,  சத்திய பிரியா, கே எஸ் ரவிக்குமார், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

உங்க கருத்தை விட உங்க டிரஸ் செம டக்கரு.. கேரளா சேச்சி கெட்டபில் தர்ஷா குப்தா குப்தா..

மேலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் அப்பொழுது காலகட்டத்தில் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது 210 பிராண்டுகள் மற்றும் 7 லட்சம் ஆடியோ கேசட்டுகள் உடன் உலகம் முழுவதும் வெளியான முதல் தமிழ் திரைப்படம் இதுதான்.

இப்படிப்பட்ட திரைப்படத்தில் தான் நக்மா நடிக்காமல் தவறவிட்டது. இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா நடித்த கதாபாத்திரத்தில் தான் முதன் முதலில் நக்மா நடிக்க வேண்டியது இந்த திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடிக்க நடிகை நக்மா அவர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சில நாட்கள் சூட்டிங் நடைபெற்றது ஆனால் பிறகு எந்த காரணத்தினால் தெரியவில்லை படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை.

பாலுமகேந்திரா, மணிரத்தினம், செல்வமணி, ஹரி, சங்கர் திரைப்படங்களில் நடித்த நடிகரின் பரிதாபமான நிலை.. அடக்கடவுளே இவருக்காக இந்த நிலைமை..

வேறு வழி இல்லாமல் அவசர அவசரமாக சௌந்தர்யா அவர்களை ஒப்பந்தம் செய்யப்பட்டு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள். இந்த நிலையில் படையப்பா திரைப்படத்தின் சூட்டிங் பொழுது நக்மா கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

rajini padayappa
rajini padayappa