1999 ஆம் ஆண்டு ரஜினி திரைப்படத்தில் நடிக்க வேண்டிய விஜய்.? ஆனால் இதுதான் உண்மையாம்

Rajini movie : தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி.  கிட்டத்தட்ட 45 வருடமாகவே தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார், எந்த ஒரு நடிகரும் இத்தனை வருடங்களாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொள்வது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி அசால்டாக இதை செய்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ரஜினியின் 45 வருட சினிமா வாழ்க்கையை சமூகவலைதளத்தில் கொண்டாடிக் கொட்டித் தீர்த்தார்கள், சமூக வலைத்தளத்தில் 10 லட்சம் பதிவுகளைக் கடந்து ஒட்டுமொத்த நடிகர்களையும் ரசிகர்களையும் பிரமிக்க வைத்தார்கள் ரஜினி ரசிகர்கள்.

மேலும் மற்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள், இந்த நிலையில் ரஜினியின் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்திளாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர் மற்றும் நடிகைகள் ஆசையிருக்கும். அப்படி இருக்கும் வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தளபதி விஜய் தவற விட்டு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தீயாய் ஒரு செய்தி பரவி வருகின்றன.

1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் படையப்பா, இந்த திரைப்படம் திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்றது, அது மட்டும் இலலாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தானம்.

அதாவது அப்பாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க தளபதி விஜயிடம் கேஎஸ் ரவிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது ஆனால் விஜயின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த தகவலில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது, கேஎஸ் ரவிக்குமார் அந்த கதாபாத்திரத்தில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க அணுகவே இல்லையாம் அது மிகவும் தவறான செய்தி எனவும் பிரபல யூட்யூப் இணையதளம் ஒன்று சமீபத்தில் தெரிவித்துள்ளது.