தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் படையப்பா. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன், செந்தில், ரமேஷ்கண்ணா, அப்பாஸ் வடிவுக்கரசி, லக்ஷ்மி, ராதாரவி சித்தாரா அனு மோகன் சத்திய பிரியா கேஎஸ் ரவிக்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் சிவாஜி அவர்கள் ஏமாற்ற பட்டவுடன் திடீரென இறந்து விடுவார்.
அதனால் மணிவண்ணன் அவர்களிடம் தனது சொத்தை இழக்கிறார் ஆரம்பத்தில் ரஜினி அவர்களை நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் காதலிக்கிறார் ஆனால் ரஜினி சௌந்தர்யாவைத்தான் காதலிக்கிறார் பின்னர் திருமணம் செய்து கொள்கிறார்கள் அதன் பிறகு நீலாம்பரி அவர்களை எப்படி பழி வாங்குகிறார் அதிலிருந்து எப்படித் தப்புகிறார்கள் ரஜினி மற்றும் அவரது குடும்பம் என்பது தான் படத்தின் கதை.
இந்த திரைப்படம் இன்று கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரசிகர்கள் ஆவலுடன் பார்ப்பார்கள் அந்தளவு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்த நிலையில் இன்றைய ரசிகர்கள் மனதிலும் அழிக்கமுடியாத திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்துவருகிறது அப்படியிருக்கும் நிலையில் இந்த திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது.
அதாவது ரஜினி நடிப்பில் வெளியாகிய படையப்பா திரைப்படம் உலக அளவில் 45 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது இது தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.