Rajini : கடந்த ஒரு மாதமாகவே சமூக வலைதளத்தை திறந்தாலே ரஜினி பேச்சு தான் அதிகமாக இருக்கிறது ஒன்று ஜெயிலர் திரைப்படத்தைப் பற்றியும் மற்றொன்று ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றியும் தான் இந்த இரண்டையும் கடந்து தற்பொழுது ரஜினி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் காலில் ரஜினி விழப்போன சம்பவம் இந்த இரண்டு தினங்களாகவே சமூக வலைதளத்தில் ரஜினியை பற்றிய பேச்சு தான் அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது.
பொதுவாக ரஜினி வயதில் சிறியவராக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி தனக்கு பிடித்து விட்டால் அதனை பாராட்டியே தீர வேண்டும் என்ற பண்பாடு கொண்டவர் இப்படி தொடர்ச்சியாக ஏதாவது செய்யப் போய் தான் ரஜினியை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார் இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்கிற்கு வந்தது.
படம் வெளியாகி நல்ல ஓபனிங் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் பொன்னியின் செல்வம், விக்ரம் ஆகிய திரைப்படங்களின் சாதனையை முறியடிக்கும் என பலரும் கூறி வந்த நிலையில் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினி ஓ பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுவது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனை பார்த்த பல ரசிகர்கள் ரஜினியை ட்ரோல் செய்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் ரஜினி மீது அதிக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நான் நல்லவர்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே பயப்படுவேன் என பேசி இருந்தார் இந்த வசனத்தை வைத்து எடிட் செய்து பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் கமல் காலில் விழப்போன சம்பவம் குறித்து ரஜினி பேசிய வீடியோவை நெட்டிசன்கள் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.
கமலின் நூறாவது திரைப்படம் தான் ராஜபார்வை இந்த திரைப்படம் உருவாகும் பொழுது நடிகர் சிவாஜியை ரஜினி சந்தித்துள்ளார் அப்பொழுது என்னப்பா உன்னுடைய நண்பன் நூறாவது திரைப்படமான ராஜபார்வை என்று வைத்துக்கொண்டு கண்ணு தெரியாதது போல் நடிக்கிறாராமே அப்படி நடித்த நல்லாவா இருக்கும் நீ ஒருவாட்டி சொல்ல வேண்டித்தான என கூறியுள்ளார் அதற்கு ரஜினி என்னால் சொல்ல முடியாது முடிந்தால் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றாராம்.
ரஜினி எப்பொழுதும் கமல் நடிக்கும் படங்களை பற்றி பேச மாட்டாராம். இதைவிட ஒரு சுவாரசியமான சம்பவத்தை ரஜினி கூறியுள்ளார் அதாவது 1989 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய அபூர்வ சகோதரர்கள் படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இன்று வரை எப்படி கமல் குள்ள மனிதனாக நடித்தார் என்று பலருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரஜினி இரவு 11 மணிக்கு இந்த திரைப்படத்தை பார்த்துள்ளார் ஸ்பெஷல் ஷோவில் தான் இந்த திரைப்படத்தை ரஜினி பார்த்துள்ளார் உடனே படம் முடிந்து இரண்டு மணிக்கு நேராக வண்டியை கமல் வீட்டிற்கு திருப்பினார் 2 மணி என்று கூட பார்க்காமல் கமல் வீட்டு கதவை தட்டியுள்ளார். தூக்கத்தில் இருந்த கமலை கட்டி அணைத்து இந்தப் படத்தில் நடித்ததற்காக உங்கள் காலில் கூட விழலாம் என கூறிய ரஜினி வயதில் சிறியவர் என்பதால் விழவில்லை என ரஜினி கூறினாராம். மேலும் மேடையில் ரஜினி தமிழ் சினிமாவிற்கு கமல் போர் ஒரு நடிகன் கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம் கமல்தான் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் கலை ஞானி எனவும் ரஜினி பாராட்டினார்.