அரசியலில் ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பிக்க ஆசிர்வாதம் வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி. யாரிடம் பார்த்தீர்களா வைரலாகும் புகைப்படம்.

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் முடிவடைய இருக்கிறது,  இந்த திரைப்படம் முடிந்ததும் முழுநேர அரசியல் தலைவராக ரஜினிகாந்த் உருமாற இருக்கிறார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் தன்னுடைய அரசியல் வருகை பற்றி உறுதி செய்தார்.  அதுமட்டுமில்லாமல் அரசியல் கட்சியாக தன்னுடைய ரஜினி மக்கள் மன்றத்தை மாற்றுவதற்காக அவரால் நியமனம் செய்யப்பட்ட அர்ஜுனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர்களை ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென தன்னுடைய காரில் பெங்களூருக்கு சென்றார். என்ற செய்தி இணையதளத்தில் தீயாய் பரவியது ஆனால் அவர் எதற்காக பெங்களூர் சென்றார் என்று தெரியாத விஷயமாக இருந்தது.

இந்த நிலையில் இவர் பெங்களூர் சென்றது எதற்காக என்பது தற்போது தெரிய வந்துள்ளது பெங்களூரில் இருக்கும் தன்னுடைய மூத்த அண்ணன் சத்யநாராயணா அவர்களிடம் ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெறுவதற்காகவே பெங்களூர் சென்றுள்ளார்.  அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு தன்னுடைய அண்ணனிடம் ஆசி வாங்க வேண்டும் என்பதற்காக தான் அவர் பெங்களூர் சென்று உள்ளார்.

அங்கு சென்று அண்ணன் காலில் விழுந்து ஆசி வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.  அரசியல் என்ற ஆடுபுலி ஆட்டத்தில் விளையாடுவதற்கு முன்பு அண்ணனிடம் ஆசிர்வாதம் வாங்கும் தலைவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பிறந்த நாள் முடியும் வரை தன்னுடைய அண்ணனுடன் அங்கேயே இருப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

rajini-brother
rajini-brother