தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் அதிக வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவராக இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தை இருந்தாலும் வசூலில் 200 கோடிக்கு கோடிக்கு மேல் அள்ளி ஒரு புதிய சாதனையை படைத்தது இருப்பினும் ரஜினி லெவெலுக்கு இது கம்மியான வசூலாக தான் பார்க்கப்பட்டது இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்த படத்தை ஒரு சூப்பர் ஹிட் படமாக கொடுத்த சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற இருக்கும் நெல்சன்.
உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. தலைவரின் 169 திரைப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் நெல்சன். அந்த வகையில் ரஜினிக்கு வில்லனாக கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இருக்கின்ற நிலையில் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஹீரோயின்னாக மீண்டும் உலக அழகி ஐஸ்வர்யாராய் ஜோடியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தற்பொழுது ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். காரணம் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன அந்த வகையில் தலைவர் 169 திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என கூறுகின்றனர்.