கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான ரஜினி நயன்தாரா செல்பி..! அண்ணாத்த திரைப்படத்தில் இப்படி ஒரு தவறான காட்சியா..?

rajini-1
rajini-1

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் இவருக்கு இந்திய அளவில் மாபெரும் ரசிகர் கூட்டம் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே பிரம்மாண்ட முதலீடு போட்டு எடுக்கப்படும் திரைப்படமாக இருப்பது மட்டுமல்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது அந்தவகையில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் தர்பார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா  நடிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ், குஷ்பூ, மீனா ,சூரி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணியை மிக விறுவிறுப்பாக படக்குழுவினர்கள் செய்து வருகிறார்கள் மேலும் இத்திரைப்படத்தினை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என பட குழுவினர்கள் தீர்மானமாக இருக்கிறார்களாம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து ஒவ்வொரு பாடலாக இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இன் நிலையில் சார காற்று என்ற பாடல் ஒன்றில் நயன்தாராவுடன் ரஜினி செல்பி எடுக்கும் படியான ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

nayan-1
nayan-1

அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சிகள் நயன்தாரா தன்னுடைய செல்போனில் கேமராவை மறைக்கும்படி கையை வைத்துள்ளார் இதனை மிக உன்னிப்பாக கவனித்து ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் கிண்டலும் கேலியும் செய்து வருவது மட்டுமில்லாமல் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி வருகிறார்கள்.

nayan-2
nayan-2

பொதுவாக நயன்தாராவுக்கும் ரஜினிக்கும் உள்ள வயது வித்யாசத்தை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வரும் வகையில் தற்போது இப்படி ஒரு புகைப்படம் வெளிவந்தது நெட்டிசன்களுக்கு படைகள் போட்டதுபோல ஆகிவிட்டன.

nayan-3
nayan-3