தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவரது கையில் சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.
இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அது குறித்து தகவலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார். செப்டம்பர் 30ஆம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிறது
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஒரு புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார் கார்த்தி.
ராஜீ முருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி உடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்த ஹீரோ வில்லன் என பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருப்பதால் கால்ஷிட் கொடுக்க முடியாத காரணத்தினால் கார்த்தியின் புதிய படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார்.
இது ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்துள்ளது கார்த்தியுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்தால் அந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் மேலும் கார்த்தியும் விஜய் சேதுபதியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் மற்றும் சந்திக்கும் காட்சிகள் சிறப்பாக இருக்கும் ஆனால் அதற்கான வாய்ப்புகள் தான் தற்போது இல்லை.