1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைபடம் படையப்பா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, அந்த காலகட்டத்திலேயே இந்த திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
மேலும் இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன், நாசர், செந்தில் ரமேஷ்கண்ணா, அப்பாஸ், பிரித்தா, வடிவுக்கரசி லட்சுமி, ராதாரவி, சித்ரா, அனு, மோகன், சத்யபிரியா, கேஎஸ் ரவிக்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படம் 1996இல் வெளியாகி இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்தநிலையில் படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரமான நீலாம்பரியின் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த நடிகை யார் என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆம் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஐஸ்வர்யாராய் தான்.
முதன்முதலில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படக்குழு ஐஸ்வர்யா ராய் அவர்களை தான் அணுகினார்கலாம் ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது அதன்பிறகு நீலாம்பரியின் கதாபாத்திரம் மீனாவுக்கு சென்றது ஆனால் சில காரணத்தால் அவரும் தவிர்த்தார் பிறகுதான் ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றது. இந்த தகவல் நீண்ட நாள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் நீலாம்பரியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு இந்த கதாபாத்திரம் செட்டாகாது என பலரும் கூறுகிறார்கள் இந்த கதாபாத்திரத்திற்கு ரம்யாகிருஷ்ணன் தான் பொருத்தமாக இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.